ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...
என் பெயர் கலை நான் இந்திய சமையல் குறிப்பாக சைவசமயல் செய்வது குறித்து .நிறைய சமையல் வகைகளை எழுதியுள்ளேன். நீங்கள் விரும்பினால் எந்த வகை சமையல் செய்ய வேண்டும்.எப்படி செய்வது எனக் கேட்டால்.உடனே அதனைப் பற்றிய செய்முறை விளக்கம் எழிதி அனுப்புவேன். Kalaireal18@gmail.com இது என்னுடைய mail address இதில் contact பன்னலாம்
My name is Art.I have written a lot of recipes on Indian cuisine especially about vegetarianism. If you want to know what type of cooking to do. How to do it. I will send you a recipe description of it immediately.
கருத்துகள்