ஈஸி கோகனட் லட்டு
தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் - 1 கப், காய்ந்த தேங்காய்த்துருவல் - 1 1/4 கப், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அடிகனமான கடாயில் நெய்
சேர்க்கவும். சூடானதும், கன்டென்ஸ்டு மில்க், காய்ந்த தேங்காய்த்துருவல் 1 கப் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, 7 - 8 நிமிடங்கள் கைவிடாமல் கிளறினால், மாவு இளகி, சற்றே கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் வரும். இப்போது அடுப்பை அணைத்து இறக்கி, சற்றே ஆறியதும், எலுமிச்சை அளவு எடுத்து, உருண்டைகள் பிடிக்கவும். இவற்றை, மீதமுள்ள 1/4 கப் தேங்காய்த்துருவலில் போட்டு, புரட்டியெடுத்து, பரிமாறவும்.
ஆட்டா லட்டு
தேவையானவை: கோதுமைமாவு, சர்க்கரை
தலா 1 உருக்கிய நெய் - 1/3 கப், முந்திரி, பாதாம் - தலா 15.
செய்முறை :பாதாம், முந்திரியைப் பொடியாக நறுக்கவும். சர்க்கரையைப் பொடிக்கவும். அடிகனமான கடாயில் கோதுமைமாவைச் சேர்த்து, நிறம்மாறி வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும். அதே கடாயில் நெய் ஊற்றி, நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து, பொன்னிறமாக வறுத்து, அடுப்பை அணைக்கவும். அந்த கடாயில், வறுத்த கோதுமைமாவு, சர்க்கரைச் சேர்த்து, நன்றாகக் கலந்துவிடவும். உருண்டைப் பிடிக்கும் பதம் வந்ததும், எலுமிச்சை அளவு மாவை எடுத்து, உருண்டைகள் பிடிக்கவும்.
குறிப்பு: பிஸ்தா, திராட்சையும் சேர்க்கலாம். ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும்.
மோகன்தால்
தேவையானவை: கடலைமாவு - 1 1/2 கப், கன்டென்ஸ்டு மில்க், நெய் - தலா 1/2 கப், பாதாம், பிஸ்தா - தலா 8.
செய்முறை:கடலைமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் சேர்த்து, கையால் உதிர்க்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, அது சற்று உருகியதும் கடலைமாவு சேர்த்து, மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுக்கவும். கடலைமாவு சற்றே பொன்னிறமானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, 8 - 10 நிமிடங்கள் கிளறவும், பின்னர், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து,கட்டி இல்லாமல் கிளறவும். கலவை சற்றே கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் வந்ததும், நெய்த் தடவிய தட்டில் கொட்டவும். நறுக்கிய பாதாம், பிஸ்தாவை தூவி, சமன்செய்யவும். லேசாக சூடு இருக்கும்போதே வில்லைகள் போடவும். நன்றாக ஆறியதும் பரிமாறவும்.
காஜு கத்லி
தேளையானவை: முழு முந்திரி - 1 கப், சர்க்கரை - 1/2 கப், தண்ணீர் - 5 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
செய்முறை: முந்திரியை வெறும் வாணலியில் போட்டு,
மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் மொறுமொறுப்பாக வறுக்கவும். நன்கு ஆறியதும், மிக்ஸியில் பொடிக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடுசெய்து, தணலை மிதமாக வைத்து, தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்து, தண்ணீர் கொதிக்கும்போது, முந்திரிப்பொடியைச் சேர்த்து, கட்டிசேராதவாறு கைவிடாமல் கிளறவும். கடாயில் ஒட்டாமல் வரும்போது, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, சமன்செய்யவும், வெதுவெதுப்பாக இருக்கும்போது, சதுரமாகவோ டைமண்ட் வடிவிலோ வில்லைகள் போடவும். ஆறியதும் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக