மம்மிடிகாய பெசர பச்சடி&ஆந்திரா பப்பு&கோங்கூரா, பச்சடி&ஆந்திரா கன் பவுடர்&மம்மிடிகாய பப்பு&தோட்ட கூற பப்பு
மம்மிடிகாய பெசர பச்சடி
தேவையானவை: சதுரங்களாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 3, வெல்லம் - அரை டீஸ்பூன்.
தாளிக்க: நல்லெண்ணெய் - தேவைக்கு, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து
எடுக்கவும். அதே வாணலியில் சீரகம், வரமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும், பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கி, பச்சடியில் கலக்கவும். சூடான சாதத்துடன் நெய் சேர்த்து பரிமாறவும்.
ஆந்திரா பப்பு
தேவையானவை: துவரம் பருப்பு - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு -5 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 5, வரமிளகாய் - 2, சின்ன வெங்காயம் 10, பெரிய சைஸ் தக்காளி - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவைக்கு, கொத்துமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: துவரம் பருப்புடன் சிறிதளவு மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணிர்
சேர்த்து குழைய வேகவிடவும். பூண்டை நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகைப் போட்டு பொரிய விட்டு, சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நசுக்கிய பூண்டு, கீரிய பச்சைமிளகாய், கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வேகவைத்த துவரம் பருப்பு அரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.
கோங்கூரா, பச்சடி
தேவைவை சிவப்பு நிற தண்டு கொண்ட புளிச்சக்கீரை - ஒரு கட்டு, வரமிளகாய்-15 முதல் 18, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, பூண்டு - 5 பல் நல்லெண்ணெய், உப்பு -தேவைக்கு
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கீரையை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடிக்கவும். வாணலியில்
ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கிள்ளிய வரமிளகாய் பாதியளவு, பெருங்காயம் சேர்ந்து, மிளகாய் சற்றே பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கீரையை கருள வதக்கவும், மீதமுள்ள வரமிளகாயை மிக்ஸியில் போட்டு, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து, வதக்கி வைத்துள்ள புளிச்சக்கீரையைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் அரைத்த கீரை விழுதைச் சேர்த்து நன்றாக சுருள வதக்கி இறக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்துக்கும் ஏற்ற பச்சடி இது!
ஆந்திரா கன் பவுடர்
தேவையானவை: துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு -தலா அரை கப், வரமிளகாய் -12, கறிவேப்பிலை - 3 கொத்து, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு, பொன்னிறமாகவும் வாசனை வரும் வரையும் வறுக்கவும். பின்னர் அதே வாணலியில் வரமிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து, வரமிளகாய் சற்றே நிறம் மாறும் வரை வறுத்து எடுக்கவும். சீரகத்தைப் போட்டு பொரியும் வரை வறுத்து, பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பின்னர் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சற்றே கொரகொரப்பாக அரைத்து எடுத்து, காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்,
குறிப்பு: சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு நெய் ஊற்றி, பிசைந்துச் சாப்பிடலாம். பொரியல் செய்யும்போது, மிளகாய்த்தூளுக்குப் பதிலாக இந்தப் பொடியைத் தூவி செய்தால், சுவை வித்தியாசமாக இருக்கும்!
மம்மிடிகாய பப்பு
தேவையானவை: துவரம் பருப்பு - ஒரு கப், சதுரங்களாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் முக்கால் கப், தண்ணீர் - தேவைக்கு, பச்சைமிளகாய் - 5, இஞ்சி அரை இன்ச், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்துமல்லித்தழை - சிறிதளவு.
தாளிக்க: கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 5 பல், வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, மஞ்சள்தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் துவரம் பருப்பு, மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து, பருப்பை குழைய வேகவைத்து இறக்கி, மத்தால் நன்றாக பின்னர் சீரகத்தைச் சேர்த்து பொரிய விட்டு, நசுக்கிய பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை, மசிக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, கடுகைப் போட்டு பொரிய விடவும். மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, பருப்பில் கொட்டவும். நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி, சூடான சாதத்துடன் நெய் கலந்து பரிமாறவும். சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாகவும் பரிமாறலாம்..
குறிப்பு: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் சரி சமமாகச் சேர்க்கலாம். மாங்காய்த் துண்டுகளை பருப்புடன் சேர்ப்பதால், 5-6 விசில் வரும் வரை பருப்பை நன்றாக வேகவிடவும்.
தோட்ட கூற பப்பு
தேவையானவை: முளைக்கீரை / அரைக்கீரை - ஒரு கட்டு, துவரம் பருப்பு - அரை கட்ட பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் - 20. பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சைமிளகாய் - 6, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு தண்ணீர் - தேவைக்கு.
தாளிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் -ஒரு சிட்டிகை.
செய்முறை: கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும். துவரம் பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய கீரை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் வேகவைத்த பருப்புக் கலவை, சிறிதளவு தண்ணி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கலவை சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பெருங்காயத்தை தாளித்துக் கொட்டி, பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக