தயிர் சட்னி
தேவையானவை: தயிர் -ஒன்றரை
கப், வாழைக்காய் ஒன்று, நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபின் ஸ்பூன், உப்பு
தேவையான அளவு வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3,
சீரகம் பொடிய பொடியாக நறுக்கிய இஞ்சி, எண்ணெய்
தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் -3 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இதழ்கள்.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்து பொருட்களை போட்டு தாளித்து தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து வைக்கவும். வாழைக்காயை தோலுடன் நான்கு பாகங்களாக
நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு சேர்ந்து வேகவிடவும். வாழைக்காய் வெந்ததும், தோலை உரித்து மசித்து, அகலமான பாத்திரத்திற்கு மாற்றவும். இதனுடன் வறுத்து பொடித்தப் பொ தயிர், தாளிப்பு உள்ளிட்டவற்றைக் கலந்து, நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி
பரிமாறவும்.
குறிப்பு: உப்புமா, கொழுக்கட்டை, நூடுல்ஸ், பாஸ்தாவுக்கும்கூட சிறந்த ஜோடிதான் இந்த
தட்கா இட்லி
தேவையானவை: மினி இட்லி - 20,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 6 டேபிள் ஸ்பூன், மெலிதாக சீவிய குடைமிளகாய் 4 டேபிள் ஸ்பூன், சில்லி ஃபிளேக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை 8 இதழ்கள், நறுக்கிய கொத்துமல்லித்தழை -2 டேபிள் ஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் கேரட் துருவல், சீவிய குடைமிளகாய், சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து வதக்கி, உப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். காய்கள் நன்றாக வெந்ததும், மினி இட்லிகளை அதில் போட்டு, இட்லிகள் உடையாதவாறு பிரட்டி, கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். தயிர் சட்னியுடன் பரிமாறவும்.
குடைமிளகாய் சட்னி
தேவையானவை: பச்சை நிற குடைமிளகாய்
3 நசுக்கிய புளி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க: காய்ந்த - 2,
எண்ணெய் - ஒரு டீஸ் அந்த மிளநரம்பின் ஸ்பூன் தனியா - 2 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டேபிள் என் கற்கு உளுந்தம் பருப்பு பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து,
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து, தனியே வைக்கவும். அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
விட்டு, நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கி இறக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு, உப்பு, புளி, வறுத்துப் பொடித்த பொடியைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கெட்டியாக நைஸாக அரைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, அரைத்த சட்னியுடன்கலந்து பரிமாறவும்.
குறிப்பு: பஜ்ஜி, சமோசா, கட்லெட்டுக்கும்கூட இந்தச் சட்னியை தொட்டுக்கொள்ளலாம் !
ஸ்பிரிங் ஆனியன் சட்னி
தேவையானவை: வெங்காயம் மற்றும் அதிலுள்ள பச்சை நிறத் தண்டுடன் நறுக்கிய வெங்காயத்தாள் - 2 கப், பச்சைமிளகாய் - 3, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் 4 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கலப்பதற்கு கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு -ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு பொடி - 2 டேபிள் ஸ்பூன். இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
செய்முறை: வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தாள், தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். பின்னர்
அதை மிக்ஸியில் போட்டு, உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகவும் கொரகொரப்பாகவும் அரைக்கவும். இதனுடன், கலந்து வைத்துள்ள தயிர் கலவையைச் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இந்த சட்னிக்கு தாளிப்பு தேவை இல்லை. இட்லிக்கு மட்டுமல்ல தோசை, சப்பாத்தி, இடியாப்பம் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்ற சட்னி இது!
ஸ்டஃப்டு இட்லி
தேவையானவை: இட்லி மாவுஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.ஸ்டஃப் செய்ய: உருளைக்கிழங்கு - 2, காராமணி - கால் கப், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, பெருங்காயம், ஓமம் தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபிள், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காராமணியை 4மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிட்டு, அதிகப்படியான நீரை வடிக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, உப்பு சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெந்த காராமணி, வெந்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, ஓமம், தனியாத்தூள், கரம்மசாலா, ஆம்சூர் பவுடர் சேர்த்து வதக்கி, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இந்தக் கலவையை உருட்டி, வடை மாதிரி தட்டி வைக்கவும். லேசாக எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் அரை கரண்டி அளவு இட்லி மாவை ஊற்றி, மேலே தட்டிய ஒரு வடையை வைக்கவும், பின்னர் அதன் மேலே ஒரு கரண்டி அளவு இட்லி மாவை ஊற்றி, அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். இதற்கு வெங்காயத்தாள் சட்னி ஏற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக