மசாலா காய்கறி இட்லி
ஊறவைத்த பச்சைப்பட்டாணி - 6 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 4 டேபிள் ஸ்பூன், கேரட் துருவல், மிளகாய்த்தூள் - தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உடைத்த உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை 8 இதழ்கள், நறுக்கிய கொத்துமல்லித்தழை -டேபிள் ஸ்பூன், மெலிதாக சீவிய இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, உடைத்த உளுந்து போட்டு தாளித்து, நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி, கேரட் துருவல், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, 2 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் மூடியைத் திறந்து, கொத்துமல்லித்தழை தூவி இறக்கி, லேசாக ஆறவிட்டு, இட்லி மாவுடன் கலக்கவும். இந்த மாவை இட்லித்தட்டில் ஊற்றி, ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். முள்ளங்கி சட்னியுடன் பரிமாறவும்.
தாளிப்பு வடகச் சட்னி
தேவையானவை; உதிர்த்த வெங்காய
வடகம் - அரை கப், துருவிய வெல்லம் - 4 டேபிள் ஸ்பூன், நசுக்கிய புளி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன்
எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி, வெங்காய வடகத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு, பொடித்த பொடி, உப்பு,
வெல்லம், புளியைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து, தாளித்து பரிமாறவும்.
குறிப்பு: இந்தச் சட்னியை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். இட்லியுடன் இந்த சட்னி சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி சரியாகும்.
பனீர் இட்லி
, பனீர் துருவல் - தலா அரை கப், தயிர் -ஒரு கப், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - தலா 4 டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய், சில்லி ஃபிளேக்ஸ் தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை 8
செய்முறை: பாத்திரத்தில் ரவை, கடலை
மாவு, தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கலக்கி, கேரட் துருவல், நறுக்கிய வெங்காயத்தாள், கொத்துமல்லித்தழை, பனீர் துருவல் சேர்த்து கலந்து, 5 நிமிடம் வைக்கவும். இந்த மாவை நன்றாகக் கலந்து, இட்லித்தட்டில் ஊற்றி, அடுப்பை குறைந்தத் தணலில் வைத்து, 5 நிமிடம் வேக விட்டு எடுக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பெருங்காயம், சில்லி ஃபிளேக்ஸ், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கி, வேகவைத்த இட்லிகளின் மீது தூவி அலங்கரிக்கவும். தாளிப்பு வடகச் சட்னியுடன் பரிமாறவும்.
மசாலா வேர்க்கடலை சட்னி
தேவையானவை: மசாலா வேர்க்கடலை
ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 15 பற்கள், தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம்- தலா ஒரு டீஸ்பூன்,
செய்முறை: வாணலியில் ஒரு
டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டு பற்களை வதக்கவும். மிக்ஸியில், மசாலா வேர்க்கடலையைப் போட்டு இரண்டு சுற்றுச் சுற்றி, வதக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து மறுபடியும் ஒரு சுற்றுச் சுற்றி, தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து, கெட்டியாக நைஸாக அரைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்பு: வெந்தய தோசை மற்றும் ஊத்தப்பத்திற்கும் இந்த சட்னி சூப்பர் காம்பினேஷன்!
ஆட்டா இட்லி
தேவையானவை: கோதுமை மாவு, தயிர்
தலா ஒரு கப், வெள்ளை ரவை - அரை கப், உடைத்த முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்த காலிஃபிளவர் - அரை கப், பெருங்காயம் அரை டீஸ்பூன், கேரட் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - 8 இதழ்கள், நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், உப்பு
தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் கோதுமை மாவை வறுத்து ஆறவிடவும். அதே வாணலியில் ரவையை வறுத்து ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தயிரை ஊற்றி, சிறிதளவு உப்பு, வறுத்து ஆறவைத்த கோதுமை மாவு, ரவை இரண்டையும் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கலந்து, 20 நிமிடம் ஊற விடவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், முந்திரித் துண்டுகளை போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, கேரட் துருவல், காலிஃபிளவர் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி சிறிது நேரம் மூடி வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து, நறுக்கிய கொத்துமல்லித்தழையை கலந்து, தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.5 நிமிடம் கழித்து, இந்த மாவை இட்லித் தட்டில் இட்லிகளாக ஊற்றி, அடுப்பை சிம்மில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும். மசாலா வேர்க்கடலை சட்னியுடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக