சௌசௌ சட்னி&இஞ்சி சட்னி&சாட் சட்னி&தயிர் இட்லி வித் நட்ஸ்&தயிர் இட்லி வித் நட்ஸ்&வெந்தயக்கீரை இட்லி&போஹா இட்லி&பறங்கிக்காய் சட்னி
சௌசௌ சட்னி
தேவையானவை: சௌசௌ, தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, காய்ந்த மிளகாய் 4, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 8 இதழ்கள்.
செய்முறை: சௌசௌவின் தோலை சீவி, விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்தமிளகாய், நறுக்கிய வெங்காயம், சௌசௌ துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். தாளிக்கக். கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து, நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இட்லிக்கு மட்டுமல்ல அடை, தோசைக்கும் சிறந்த ஜோடி இந்த சௌசௌ சட்னி!
இஞ்சி சட்னி
தேவையானவை இஞ்சி - 200 கிராம்,
துருவிய வெல்லம் -4 டேபிள் ஸ்பூன், திக்கான புளிக்கரைசல் - கால் கப், பெருங்காயம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், காஷ்மீரி சில்லி படர் - 3 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு --தேவையான அளவு
செய்முறை: இஞ்சியின் தோலை சீவி, கேரட்
துருவியில் துருவிக்கொள்ளவும். வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, துருவிய இஞ்சியைச் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு, புளிக்கரைசல் சேர்க்கவும், இஞ்சித்துருவல் பாதிக்கு
மேல் வெந்ததும், சில்லி பவுடர், வெல்லம் சேர்த்து நன்றாக வேக விடவும். எல்லாம் சேர்ந்து சட்னி பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்பு: ஜீரணத்திற்கு பெரிதும் துணைபுரியும் இந்தச் சட்னியை, பொங்கல் அல்லது பெசரட்டுடனும் சாப்பிடலாம்.
சாட் சட்னி
தேவையானவை: துருவிய வெல்லம்
அரை கப், ஆம்சூர் பவுடர், சர்க்கரை - தலா 4 டேபிள் ஸ்பூன், சில்லி ஃபிளேக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன், காலா நமக் அரிசி, கரம் மசாலா, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சுக்குத்தூள் -அரை டேபிள் ஸ்பூன், விதை நீக்கிய பேரீச்சை - 6, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தை
அடுப்பில் வைத்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, ஆம்சூர் பவுடரை சேர்த்துக் கிளறவும். பவுடர் நன்றாகக் கரைந்து வந்ததும், சர்க்கரை, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் பொடியாக, நறுக்கிய பேரீச்சை, சில்லி ஃபிளேக்ஸ், உப்பு, காலா நமக் அரிசி, கரம் மசாலா, சீரகத்தூள், சுக்குத்தூள்
ஆகியவற்றையும் ஒவ்வொன்றாக சேர்த்துக் கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து நிறம் மாறி, கலவை கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். இதனை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து, ஃபிரிட்ஜில் வைத்து, ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்!
குறிப்பு: சமோசா, உருளைக்கிழங்கு லாலிபாப், சேவ்பூரி உள்ளிட்டவற்றுக்கும் இந்தச் சட்னியை தொட்டுக்கொள்ளலாம்.
தயிர் இட்லி வித் நட்ஸ்
தேவையானவை: இட்லி - 10, எண்ணெய்
4 டேபிள் ஸ்பூன், கெட்டித் தயிர் உப்பு - சிறிதளவு. ஒரு கப்,
அரைக்க: பச்சைமிளகாய்.
தேங்காய்த்துருவல் - கால் கப்.
தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 8 இதழ்கள்.
மேலே தூவி அலங்கரிக்க: பாதாம் - 10,
முந்திரி - 6, உலர் திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன், கேரட் துருவல் 3 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
தயிர் இட்லி வித் நட்ஸ்
செய்முறை: ஒவ்வொரு இட்லியையும் 4
துண்டுகளாக கட் பண்ணவும். வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இட்லித் 2,துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும். மிக்ஸியில், பாதாம், முந்திரியைப் போட்டு, நீர் விடாமல் ரவை பதத்திற்கு உடைத்து தனியே வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து, பொரித்த இட்லித் துண்டுகளைச் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து அடுப்பை அணைக்கவும். ரவை பதத்திற்கு உடைத்த பாதாம், முந்திரித் துருவலை சேர்த்து பிரட்டி, இட்லிகளின் மீது பரவலாகத் தூவவும். அதன் மேலே கேரட் துருவல், நறுக்கிய கொத்துமல்லித்தழை, உலர் திராட்சை என ஒவ்வொன்றாகத் தூவி, இஞ்சி சட்னியுடன் சுவைக்கவும்.
வெந்தயக்கீரை இட்லி
தேவையானவை: இட்லி மாவு 2 கப்,
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - ஒரு கப், தக்காளி - ஒன்று, கடுகு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், சில்லி ஃபிளேக்ஸ் டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் ஸ்பூன், உப்பு - சிறிதளவு. தலா அரை 2 டேபிள்
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, சில்லி ஃபிளேக்ஸை தாளித்து, உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்தயக்கீரையைச் சேர்த்து வதக்கி, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின்னர் தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கவும். இட்லித் தட்டில் அரை கரண்டி அளவு மாவை ஊற்றி, மேலே பரவலாக 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயக்கீரை கலவையைத் தூவவும். அதன் மேலே மறுபடியும் அரை கரண்டி அளவு இட்லி மாவை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து, வெந்ததும் எடுக்கவும். சௌசௌ சட்னியுடன் பரிமாறவும்.
போஹா இட்லி
தேவையானவை: வெள்ளை அவல் - 2
கப், ரவை அரை கப், தயிர் ஒரு கப், பச்சைமிளகாய் - 2, இஞ்சித்துருவல் ஒரு டீஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி, இனிப்பு சோளம் - தலா 4 டேபிள் ஸ்பூன், கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை நிற குடைமிளகாய் - கால் கப், சில்லி ஃபிளேக்ஸ் ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 2 டேபிள்
செய்முறை: வெள்ளை அவல், ரவை
இரண்டையும் மிக்ஸியில் 2 சுற்று சுற்றியப் பிறகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, இஞ்சித்துருவல், தயிர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். இதனுடன், நறுக்கிய குடைமிளகாய், சில்லி ஃபிளேக்ஸ், பட்டாணி, சோளம், கேரட் துருவல், நறுக்கிய கொத்துமல்லித்தழை ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இந்த மாவை இட்லித்தட்டில் ஊற்றி, ஆவியில் 8 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். பறங்கிக்காய் சட்னியுடன் பரிமாறவும்.
பறங்கிக்காய் சட்னி
தேவையானவை: தோல், விதை நீக்கிய
பறங்கித் துண்டுகள் - கால் கிலோ, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன், தனியா - 4 டேபிள் ஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், புளி அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 6 இதழ்கள்.
செய்முறை: பறங்கிக்காய்த் துண்டுகளை
கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய் இவற்றை வறுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றவும். மீதமுள்ள 2
டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை வாணலியில் விட்டு, பறங்கிக்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி, பருப்புக் கலவையுடன் சேர்த்து, புளி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கெட்டியாக நைஸாக அரைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு: இந்தச் சட்னியை தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக