மூலிகை ரசம்
தேவை: கற்பூரவல்லி இலை - 2 (சிறியது), வெற்றிலை - 3, கொய்யா இலை - 1, 10 (இலைகள்), புதினா, மல்லி, கறிவேப்பிலை சேர்ந்து சிறிது உப்பு ருசிக்கு, எண்ணெய் தேவைக்கு. பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - சிறிது, தக்காளி - 1, மிளகு, சீரகம் ஓமம் - தலா - 1 டீஸ்பூன்.'
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - அரை ட பூண்டு (2 பற்கள்) தட்டிக் கொள்ளவும்.
செய்முறை: மேற்குறிப்பிட்ட எல்லா இலைகளையும் அலசி 3 கப் நீரில் போட்டு கொதிக்க
விடவும். அதில் மிளகு, சீரகம், ஓமம் சிறிது உப்பு சேர்த்து ஒன்றரை கப் ஆகும் வரை நீர் கண்ட கொதிக்கவிட்டு நிறுத்தி வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து மஞ்சள்தூள், பெருங்காயம், அரிந்த தக்காளி சேர்த்து வதக்கி அந்த வடிகட்டின ஹெர்பல் நீரை இதில் ஊற்றி பொங்கியதும் உப்பு சிறிது சேர்த்து நிறுத்தவும். முழு வெற்றிலை அல்லது முழு கற்பூரவல்லி இலை சேர்த்து அல்லது துளசி, புதினா சேர்த்து மூடவும். பரிமாறும் முன் அந்த இலையை எடுத்துவிட்டு பரிமாறவும்.
லகுறிப்பு: சளித் தொந்தரவைப் போக்கும் மருத்துவக் குணம் வாய்ந்த ரசம் இது அனைத்து தொலகளுக்குப் பதில் நார்த்தம் இலை, கொய்யா இலை, வெற்றிலை, கற்பூரவல்லி இலை என ஏதாவது ஒரு வகை மட்டும் சேர்த்தும் இவ்வகை ரசம் செய்யலாம்.
நார்த்தை ரசம்
தேவை: நார்த்தம்பழம் - 1 (கொட்டை வடிகட்டி பிழிந்து கொள்ளவும்) து.பருப்பு தண்ணீர் -ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிது. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - சிறிது, உப்பு தேவைக்கு, எண்ணெய் - தாளிக்க, மல்லித்தழை, கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் - 2.
வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - அரை டீஸ்பூன் (தலா), தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: இந்த ரசத்திற்கு, புளி, தக்காளி கிடையாது. பித்தத்தைத் தணிக்கக் கூடிய, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாக விளங்கக்கூடிய நிறைய மருத்துவக் குணம் நிறைந்த நார்த்தங்காய் பழம் ரசம் செய்முறையை இனி பார்ப்போம்.
மஞ்சள்தூள் சேர்த்து துவரம் பருப்பு - கைப்பிடி எடுத்து அதிக நீர்விட்டு வேக வைத்து மசித்து கரைத்துக் கொண்டால் பருப்பு நீர் ரெடி. வறுத்து பொடிக்க வேண்டிய பொருட்களை வெறும் கடாயில் வறுத்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்து இஞ்சி, கீறின பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கி பருப்புத் தண்ணீர், உப்பு சேர்த்து, அரைத்தபொடி போட்டு, நார்த்தை சாறு சேர்த்து பொங்கியதும் நிறுத்தவும் இறக்கி வைத்து கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு மூடி... சாப்பிடும் நேரம் பரிமாறவும்.
குறிப்பு: நார்த்தம் பழத்திற்கு பதில் சாத்துக்குடி, ஆரஞ்சுப்பழம் அல்லது பெரிய எலுமிச்சை பழத்திலும் இதே முறைப்படி செய்யலாம். இந்த ரசத்தை அதிகம் கொதிக்க வைக்கவே... திரும்ப சூடாக்கவோ வேண்டாம்... கசப்பு தன்மை வந்துவிடும், அதன் சத்து, சுவையை இழந்துவிடும்.
மோர் ரசம்
தேவை: புளிப்பான கெட்டித் தயிர் - 1 கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மல்லித்தழை 1 டேபிள் ஸ்பூன், உப்பு எண்ணெய் - தேவைக்கு, சின்ன வெங்காயம் மிளகாய் விழுது - 1 டீஸ்பூன். அரை கப், பச்சை
தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய்
1, பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, அரை டீஸ்பூன், கறிவேப்பிலை உளுந்தம்பருப்பு உடைத்தது - அரை டீஸ்பூன், வெந்தயம் சிறிது.
செய்முறை: புளித்த தயிரை, உப்பு சேர்த்து கடைந்து தேவையான தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் விழுது, மஞ் சள்தூள், மல்லித்தழை அலசி ஆய்ந்தது சேர்த்து கலக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து இதை மோர் ரசத்தில் கொட்டவும்.
இதை சூடாக்க வேண்டாம். அப்படியே பருகலாம். பரிமாறலாம்... உடம்பிற்கு குளிர்ச்சி தந்து உடல் சூட்டைத் தணிக்கும் இந்த ரசம்.
ஆப்பிள் ரசம்
தேவை: ஆப்பிள் - 1, தக்காளி - 2, உப்பு - எண்ணெய் - ருசிக்கு, துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், ரசப்பொடி - 1 டீஸ்பூன், வெல்லம் - துளி, மல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன்,
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நெய் 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம், மிளகு - தேவையானஅளவு.
செய்முறை: பிரஷர் குக்கரில் பருப்பு, அரிந்த தக்காளி தோல் சீவி விதை எடுத்து அறிந்த ஆப்பிள் பழம் பாதியை சேர்த்து நீர்விட்டு வேகவிட்டு மசித்து வைத்துக் கொள்ளவும். மீதி பாதிப்பழத்தை துருவிக் கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து துருவிய ஆப்பிள் சேர்த்து வதக்கி, ரசப்பொடி போட்டு வேக வைத்த பருப்பு ஆப்பிள் நீரை கொட்டவும். உப்பு சேர்க்கவும். வெல்லம் சேர்க்கவும். நுரைகட்டி வரும்போது மல்லித்தழை சேர்த்து அலங்காரத்திற்கு வேண்டுமெனில் சில ஆப்பிள் துண்டுகள் சேர்த்து இறக்கி மூடி வைக்கவும். இந்த ஆப்பிள் ரசம் ஒருவித புளிப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.
குறிப்பு: ஆப்பிள் பழத்திற்குப் பதில் மாதுளம் பழம் (மாதுளை முத்துக்கள்) சேர்த்தும் செய்யலாம். அன்னாசிப்பழம் சேர்க்கலாம். அப்பொழுது (தக்காளி) சேர்க்க வேண்டாம்.
தேங்காய்ப்பால் ரசம்
தேவை: தேங்காய்ப் பால் - 1 கப், மல்லித்தழை - சிறிது, து.பருப்பு தண்ணீர் - அரை கப், தக்காளி - 1, உப்பு, எண்ணெய் (சமையல் தேங்காய் எண்ணெய்) - தேவைக்கு, பச்சைமிளகாய் - 1.
தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தனியா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, சோம்பு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் சமையல் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து கீறின பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து பருப்பு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குறைந்த தணலில் வைத்து தேங்காய்ப்பால் விட்டு கிளறி உடனே நிறுத்தவும். அதிக நேரம் கொதி விட்டால் பால் திரிந்து விடும். மேலே மல்லித்தழை தூவி மூடிவிடவும்... வாய்ப்புண், வயிற்றுப்புண் போக்கும் ரசம் இது.
தேங்காய் மணத்துடன் சுவைக்க நன்றாக இருக்கும் இந்த ரசம்.
குறிப்பு:
தேங்காய்ப் பாலிற்கு பதில் சோயாபாலிலும் இவ்வகை ரசம் செய்யலாம்.
பத்திய ரசம்
தேவை: மிளகு 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பூண்டு - 6 பற்கள், காய்ந்த மிளகாய் - 2, சீரகம் 1 டீஸ்பூன், பெருங்காயம் - மிளகு அளவு, உப்பு, நெய் - சிறிது, மல்லித்தழை அலசி ஆய்ந்தது - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: புளியை நேரடியாக தணலில் திருப்பி திருப்பிப்போட்டு சுட்டுக் கொள்ளவும். அதை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உப்பு பெருங்காயத்தூள், மல்லித்தழை, மஞ்சள் தூள் இக்கரைசலில் போடவும்.
நெய்யில் பெருங்காயம், மிளகு, சீரகத்தை தனித்தனியே வறுத்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும்.'
கடாயில் நெய் விட்டு சூடானதும் பூண்டுப் பல் தட்டிப் போட்டு வதக்கி உப்பு, புளிக்கரைசலை ஊற்றி மிளகாய் வறுத்து, பெருங்கா வேண்டங் கடைசியில் மிளகு, சீரகப்பொடி போட்டுநிறுத்தவும் எதையும் தாளிக்க
கருத்துகள்
கருத்துரையிடுக