முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

Happy woman's day 

 Happy woman's day  This is the next successor of our company, "This Woman", at the Women's Day event held at our orphanage.  இது எங்களுடைய ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனத்தின் அடுத்த வாரிசாக '' இவள் "      

மம்மிடிகாய பெசர பச்சடி&ஆந்திரா பப்பு&கோங்கூரா, பச்சடி&ஆந்திரா கன் பவுடர்&மம்மிடிகாய பப்பு&தோட்ட கூற பப்பு

 மம்மிடிகாய பெசர பச்சடி தேவையானவை: சதுரங்களாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 3, வெல்லம் - அரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - தேவைக்கு, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - ஒரு சிட்டிகை. செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சீரகம், வரமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும், பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கி, பச்சடியில் கலக்கவும். சூடான சாதத்துடன் நெய் சேர்த்து பரிமாறவும்.  ஆந்திரா பப்பு தேவையானவை: துவரம் பருப்பு - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு -5 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 5, வரமிளகாய் - 2, சின்ன வெங்காயம் 10, பெரிய சைஸ் தக்காளி...

தயிர் சட்னி&தட்கா இட்லி&குடைமிளகாய் சட்னி&ஸ்பிரிங் ஆனியன் சட்னி&ஸ்டஃப்டு இட்லி

 தயிர் சட்னி தேவையானவை: தயிர் -ஒன்றரை கப், வாழைக்காய் ஒன்று, நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபின் ஸ்பூன், உப்பு தேவையான அளவு வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3, சீரகம் பொடிய பொடியாக நறுக்கிய இஞ்சி, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் -3 டேபிள் ஸ்பூன். தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இதழ்கள். செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன், எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்து பொருட்களை போட்டு தாளித்து தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து வைக்கவும். வாழைக்காயை தோலுடன் நான்கு பாகங்களாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு சேர்ந்து வேகவிடவும். வாழைக்காய் வெந்ததும், தோலை உரித்து மசித்து, அகலமான பாத்திரத்திற்கு மாற்றவும். இதனுடன் வறுத்து பொடித்தப் பொ தயிர், தாளிப்பு உள்ளிட்டவற்றைக் கலந்து, நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும். குறிப்பு: உப்புமா, கொழுக்கட்டை, நூடுல்ஸ், பாஸ்தாவுக்கும்கூட சிறந்த...

மசாலா காய்கறி இட்லி&தாளிப்பு வடகச் சட்னி&பனீர் இட்லி&மசாலா வேர்க்கடலை சட்னி&ஆட்டா இட்லி

 மசாலா காய்கறி இட்லி ஊறவைத்த பச்சைப்பட்டாணி - 6 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 4 டேபிள் ஸ்பூன், கேரட் துருவல், மிளகாய்த்தூள் - தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உடைத்த உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை 8 இதழ்கள், நறுக்கிய கொத்துமல்லித்தழை -டேபிள் ஸ்பூன், மெலிதாக சீவிய இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு. செய்முறை: வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, உடைத்த உளுந்து போட்டு தாளித்து, நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி, கேரட் துருவல், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, 2 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் மூடியைத் திறந்து, கொத்துமல்லித்தழை தூவி இறக்கி, லேசாக ஆறவிட்டு, இட்லி மாவுடன் கலக்கவும். இந்த மாவை இட்லித்தட்டில் ஊற்றி, ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். முள்ளங்கி சட்னியுடன் பரிமாறவும். தாளிப்பு வடகச் சட்னி தேவையானவை; உதிர்த்த வெங்காய வடகம் - அரை கப், துருவிய வெல்லம் - 4 டேபிள் ஸ்பூன், நசுக்கிய புளி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான ...

ஹோட்டல் சாம்பார் & உடுப்பி சாம்பார்

 தேவையானவை: நறுக்கிய பெரிய வெங்காயம், தக்கா தலா ஒரு கப், சின்ன வெங்காயம் அரை சுட்ட புளி எலுமிச்சையை விட சிறியது. வெந்த துவரம் பருப்பு -2 கப், மல்லித்தழை - சிறிதளவு தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் 2 பெருங்காயம் சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு பிடி வறுத்து அரைக்க: கசகசா -2 டேபிள் ஸ்பூன், பட்டை - சிறிதளவு, முந்திரி சிறிதளவு. கடலைப்பருப்பு -2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் - அரை கப், தனியா - 2 டேபிள் எபூன், காய்ந்த மின்காய் செய்முறை! எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம் தக்காளி வதக்கி புளிக் கரைசலை விடவும். பின் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, அரைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இறக்கும் பொழுது கொத்துமல்லித்தழை தூவவும்.       உடுப்பி சாம்பார் தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள் பூசணி, முருங்கைக்காய்த்துண்டுகள் - ஒரு கப் தக்காளி - அரை கப், மல்லித்தழை -சிறிதளவு, உப்பு சிறிதளவு, வெல்லம் தேவையான அளவு. வறுத்து அரைக்க: கொப்பரை - 1 கப், உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, ப...

சௌசௌ சட்னி&இஞ்சி சட்னி&சாட் சட்னி&தயிர் இட்லி வித் நட்ஸ்&தயிர் இட்லி வித் நட்ஸ்&வெந்தயக்கீரை இட்லி&போஹா இட்லி&பறங்கிக்காய் சட்னி

 சௌசௌ சட்னி தேவையானவை: சௌசௌ, தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, காய்ந்த மிளகாய் 4, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 8 இதழ்கள். செய்முறை: சௌசௌவின் தோலை சீவி, விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்தமிளகாய், நறுக்கிய வெங்காயம், சௌசௌ துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். தாளிக்கக். கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து, நன்றாகக் கலந்து பரிமாறவும். குறிப்பு: இட்லிக்கு மட்டுமல்ல அடை, தோசைக்கும் சிறந்த ஜோடி இந்த சௌசௌ சட்னி!  இஞ்சி சட்னி தேவையானவை இஞ்சி - 200 கிராம், துருவிய வெல்லம் -4 டேபிள் ஸ்பூன், திக்கான புளிக்கரைசல் - கால் கப், பெருங்காயம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், காஷ்மீரி சில்லி படர் - 3 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு --தேவையான அளவு செய்முறை: இஞ்சியின் தோலை சீவி, கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்....

ரசம் வகைகள் :-ஆப்பிள் ரசம்&மோர் ரசம்&மூலிகை ரசம்&நார்த்தை ரசம்&தேங்காய்ப்பால் ரசம்&பத்திய ரசம்

 மூலிகை ரசம் தேவை: கற்பூரவல்லி இலை - 2 (சிறியது), வெற்றிலை - 3, கொய்யா இலை - 1, 10 (இலைகள்), புதினா, மல்லி, கறிவேப்பிலை சேர்ந்து சிறிது உப்பு ருசிக்கு, எண்ணெய் தேவைக்கு. பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - சிறிது, தக்காளி - 1, மிளகு, சீரகம் ஓமம் - தலா - 1 டீஸ்பூன்.' தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - அரை ட பூண்டு (2 பற்கள்) தட்டிக் கொள்ளவும். செய்முறை: மேற்குறிப்பிட்ட எல்லா இலைகளையும் அலசி 3 கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதில் மிளகு, சீரகம், ஓமம் சிறிது உப்பு சேர்த்து ஒன்றரை கப் ஆகும் வரை நீர் கண்ட கொதிக்கவிட்டு நிறுத்தி வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து மஞ்சள்தூள், பெருங்காயம், அரிந்த தக்காளி சேர்த்து வதக்கி அந்த வடிகட்டின ஹெர்பல் நீரை இதில் ஊற்றி பொங்கியதும் உப்பு சிறிது சேர்த்து நிறுத்தவும். முழு வெற்றிலை அல்லது முழு கற்பூரவல்லி இலை சேர்த்து அல்லது துளசி, புதினா சேர்த்து மூடவும். பரிமாறும் முன் அந்த இலையை எடுத்துவிட்டு பரிமாறவும். லகுறிப்பு: சளித் தொந்தரவைப் போக்கும் மருத்துவக் குணம...