ஆரஞ்சு தோல் ஜாம்&பப்பாயா க்ரில்&ஸ்டஃப்டு காஜு ரோல்ஸ்&தூத் பேடா&நவாபி பனீர்&பூசணிக்காய் பச்சடி&வெள்ளை சாக்லேட்&புதினா பொங்கல்
ஆரஞ்சு தோல் ஜாம்
தேவையானவை: நன்கு பழுத்த கமலா ஆரஞ்சு பழங்கள் - 8, எலுமிச்சைச்சாறு
செய்முறை: இரண்டு ஆரஞ்சுப்பழங்களை உரித்து, சுளைகளிலிருக்கும் மெல்லியத் தோவை
- 1. ஸ்பூன், ஆரஞ்சு நிற ஃபுட்கலர் - சில துளிகள் (விருப்பப்பட்டால்), சர்க்கரை - தேவைக்கேற்ப நீக்கவும். மீதமுள்ள பழங்களிலிருந்து சாறெடுக்கவும் (ரொம்பவும் அழுத்தாமல், மிதமாகட பிழியவும்). தோலிலிருக்கும் சதைப்பகுதியை எடுத்து, நறுக்கிவைக்கவும். வெளித்தோலில் இருக்கும் வெண்மையானப் பகுதியை எடுத்துவிட்டு, தோலை மிகப்பொடியாக நறுக்கவும். எடுத்துவைத்தா ஜூஸ், நறுக்கிய சதைப்பகுதி, நறுக்கிய தோல், எடுத்துவைத்த சுளைகள் ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் அளந்துபோடவும். அதற்கு 1/2 பங்கு சர்க்கரை, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பில் வைக்கவும். கொதித்து, கெட்டியானதும் எடுத்து, ஆறவிடவும் (ஒரு தட்டில் விட்டு, தட்டை சாய்த்தால் ஜாம் நகரக்கூடாது). பின்னர், சுத்தமான பாட்டிலில் நிரப்பிவைக்கவும். இந்த ஜாம், பல மாதங்கள் கெடாமலிருக்கும்!
பப்பாயா க்ரில்
தேவையானவை: 2 அங்குல நீளத்தில் நறுக்கிய பப்பாளித் துண்டுகள் - 25, எண்ணெய், எலுமிச்சைச்சாறு, சீரகத்தூள் - தலா 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: பப்பாளித் துண்டுகளை ஒரு பவுலில் போடவும். அதனுடன், எண்ணெய், எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து, 15 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர், கிரில் செய்யும் குச்சியில் ஒவ்வொன்றாக செருகிவைக்கவும். மைக்ரோவேவ் அவனில், க்ரில் செய்யும் பகுதியில் வைத்து, சுட்டெடுக்கலாம். தவாவில் எண்ணெய்த் தடவிவியும், திருப்பிப் போட்டு சுட்டெடுக்கலாம். இல்லாவிட்டால், குச்சியை நேரடித் தணலில் காட்டியும் சுட்டெடுக்கலாம்.
குறிப்பு: அருமையான 'ஸ்டார்ட்டர்'. ஆனால், சுடச்சுட பரிமாறுவது அவசியம்.
ஸ்டஃப்டு காஜு ரோல்ஸ்
தேவையானவை: முந்திரிப்பருப்பு, பொடித்த சர்க்கரை - தலா 1 கப், பாதாம் - 1/2 கப்,' சர்க்கரை சேர்த்த பால்கோவா - 1/4 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 ஸ்பூன், நெய், சாரைப்பருப்பு, வெள்ளரிப்பருப்பு - 2 ஸ்பூன்.
செய்முறை: பாதாமை ஊறவைத்து, தோலுரித்து, ஒரு துணியில் பரப்பி, நன்றாக
உலர்த்தவும். பின்னர், மிக்ஸியில் போட்டு, விட்டுவிட்டு இயக்கி, கரகரப்பாகப் பொடித்து, தனியாக வைக்கவும். அடுத்ததாக, ஏலக்காய்த்தூள், சாரைப்பருப்பு, வெள்ளரிப்பருப்பை மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து, பொடிக்கவும். பாதாம்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்த பொடி, பால்கோவா சேர்த்து, நன்றாகக் கலக்கவும் (தேவைப்பட்டால், சிறிதளவு சர்க்கரைத்தூள் சேர்க்கலாம்). முந்திரிப்பருப்பை, சுடுநீரில் ஊறவைத்து, நீரை வடித்து, மிக்ஸியில் போட்டு விழுதாக்கவும். இதனுடன் நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து, கடாயில் போட்டுக் கிளறி, இறக்கவும். ஆறியதும், ஒரு பலகைமீது வைத்து, அப்பளக்குழவியால் திரட்டவும். அதன்மேல், பாதாம் கலவையைப் பூசவும். இதை, ''பாய்' போல இறுக்கிச் சுருட்டி, 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தட்டில் அடுக்கி, பரிமாறவும்..
தூத் பேடா
தேவையானவை: பால்பவுடர் - 2 கப், நெய் - 1/4 கப், பொடித்த சர்க்கரை - 1 1/2 கப்," பால் - 1/2 கப், பனீர் துருவல், உலர்ந்த தேங்காய்த்துருவல் - 1/4 கப்.
செய்முறை: நான்ஸ்டிக் கடாயில் நெய் சேர்க்கவும். நெய் உருகி வரும்போது, பால்
சேர்க்கவும். பின்னர், பால்பவுடர் சேர்த்து, நன்றாகக் கிளறவும். அடுத்ததாக, பொடித்த சர்க்கரை சேர்க்கவும். கலவை இறுகி வரும்போது அடுப்பை அணைக்கவும். இப்போது, பனீர் துருவல், உலர்ந்த தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து, சிறுசிறு உருண்டைகளாக்கவும். கிளறிய பேடாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கவும். பின்னர், சிறிய கிண்ணம்போல் செய்து, பனீர் கலவை உருண்டையை வைத்து, மூடவும். அடுத்ததாக உள்ளங்கையில் வைத்து அமுக்கி, 'பேடா' வடிவில் செய்து, தட்டில் அடுக்கி, பரிமாறவும்.
குறிப்பு: இந்த இனிப்புச் செய்வதற்கு மொத்தம் 15 நிமிடங்கள்தான் செலவாகும். திடீர் விருந்தினர்களுக்கு செய்துதர ஏற்ற வித்தியாசமான ஸ்வீட் இது!
நவாபி பனீர்
தேவையானவை: பனீர் - 200 கிராம், பால் - 2 கப், வெண்ணெய் - 4 ஸ்பூன், பாதாம்," முந்திரி - தலா 10, கசகசா - 2 ஸ்பூன், வெள்ளை வெங்காயம் - 2, இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு, பூண்டு - 4 பற்கள், பச்சைமிளகாய் - 4, சர்க்கரை சேர்க்காத கோவா, ஃப்ரெஷ் க்ரீம் 1/4 கப், சீரகம், கரம் மசாலா தலா 1 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: வெங்காயத்தை சுடுதண்ணீரில் போட்டு, மூடிவைக்கவும். பாதாமை ஊறவைத்து,
தோலெடுக்கவும். இதனுடன், கசகசா, முந்திரி சேர்த்து, ஊறவைக்கவும். பனீரை ஓர் அங்குலத்
துண்டுகளாக நறுக்கி, 1 கப் சூடான பாலில் ஊறவைக்கவும். வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். ஊறவைத்த பாதாம் கலவையை அரைக்கவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி, அரைத்த வெங்காய விழுது சேர்த்து, வதக்கவும். பின்னர், அரைத்த பாதாம் கலவை, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 1/2 கப் பாலில், கோவா சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள பால், ஊறவைத்த பனீர் கலந்த பால் சேர்த்து கொதிக்கவிடவும். அடுத்ததாக ஃப்ரெஷ் ஆக்ரீம் சேர்த்து, அடுப்பை அணைக்கவும். மிகவும் ரிச்சான சைட்-டிஷ் இது !
பூசணிக்காய் பச்சடி
தேவையானவை: பூசணிக்காய்த் துருவல் - 2 கப், கெட்டி வெள்ளை அவல் - 1/2 கப், கட்டித் தொங்கவிடப்பட்ட கெட்டித்தயிர் - 1 கப், வெள்ளை மிளகுத்தூள் - 1 ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: அவலை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். அகலமான பாத்திரத்தில் பூசணித்துருவல், பொடித்த அவல், உப்பு, மிளகுத்தூள், தயிர் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்து, ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்பு: இந்தப் பச்சடியை இரவுநேர உணவாகச் சாப்பிடலாம். | டயட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவு இது. சாதாரண கெட்டி அவலுக்குப் பதிலாக 'கைக்குத்தல் அவல்' சேர்த்தும் செய்யலாம்.
வெள்ளை சாக்லேட்
தேவையானவை: ஐசிங் சர்க்கரை, வெண்ணெய் பால்பவுடர் - 1/4 கப், வெனிலா எசன்ஸ் - 2 துளிகள். தலா 1/2 கப்,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில்
வைக்கவும். தளதளவென்று கொதிக்கும்போது, அதன்மேல் ஓர் அகலமான பாத்திரத்தை வைக்கவும். இந்தப் பாத்திரம் சூடானதும், வெண்ணெய் சேர்த்து, உருகவிடவும். பின்னர், ஐசிங் சர்க்கரை சேர்க்கவும். அது கரைந்ததும், சலித்த பால்பவுடர் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். கலவை தளதளவென கொதித்து வரும்போது, அடுப்பை அணைக்கவும். வெனிலா எசன்ஸ் சேர்த்து, நன்றாகக் கலந்து, டிரேயில் கொட்டவும். ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் தயார். அதன்பிறகு ஃப்ரிட்ஜில் பூவைக்கத் தேவையில்லை.
புதினா பொங்கல்
தேவை
வரகரிசி - 1 கப், பயறு - 1/4கப்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன், நெய் - 4 ஸ்பூன், பச்சைமிளகாட
4, புதினா - 2 கட்டு, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை 2 ஆர்க்குகள், பிஸ்தா - 10, பச்சைமிளகு / சாதாரண மிளகு 1/2 ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: குக்கரில் வரகரிசி,1 கப் பச்சைப்பயறு, 1/4 கப்உப்பு,
பெருங்காயத்தூள், 3 கப் தண்ணீர் சேர்த்து, 3 விசில்கள் வரும்வரை | வேகவைத்து, மசிக்கவும். நெய்யில் கறிவேப்பிலை, பிஸ்தா தாளித்து, | பொங்கல் மேலாகச் சேர்க்கவும். பச்சைமிளகை மேலாகச் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: விருந்தினர் வருகையின்போது செய்து, அசத்தலாம் !
கருத்துகள்
கருத்துரையிடுக