ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி
ரெடிமிக்ஸ் வடைமாவு
தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார்.
குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம்.
கபாலி புர்குலி
தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, தனியா, பச்சைமிளகாய், புதினா சேர்த்து அரைத்து, நெய்யைக் கலக்கவும். பறங்கிப்பூ இதழ்களைச் சுத்தம்செய்து, அரைத்த மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் போட்டு, சுட்டெடுக்கவும்.
குறிப்பு: இது, பீகார் ஸ்பெஷல். எள்ளை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து, கெட்டியான புளித்தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் கலந்து, பஜ்ஜியுடன் தொட்டுக்கொள்வார்கள்.
கொய்யாப்பழ தவா பஜ்ஜி
தேவையானவை: அதிகம் பழக்காத கொய்யாப்பழம் 4 பச்சைமிளகாய் - 4, கடலைப்பருப்பு - 4கப் அவல், 1/4 கப் பூண்டு 4 பற்க்கல் சீரகம் - 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
1 கப், அவல் 1/4 கப், பூண்டு
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும், அதனுடன் அவல், பூண்டு, உப்பு, பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து, அரைக்கவும். கொய்யாப்பழங்களை தோலுடனே வட்டமாக நறுக்கவும். தவாவை சூடாக்கவும். அரைத்த மாவுக்கலவையில் கொய்யாத்துண்டுகளைத் தோய்த்து எடுத்து, சூடான தவாவில் போடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு
தேவையானவை: அரிசிமாவு
1 கப், கடலைமாவு, மைதாமாவு 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1/2 தலா 1/4 ஸ்பூன், உப்பு - 1 ஸ்பூன். பேக்கிங் பவுடர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூன் 1/4 கப், காஷ்மீரி மிளகாய்த்தூள் றைம், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, இருமுறை சலிக்கவும். பின்னர், உப்பு, ஓமம் செய்முறை: மாவு வகைகளுடன், சேர்த்து, நன்றாகக் கலந்து, சுத்தமான பாட்டிலிலோ ஜிப்லாக் கவரிலோ நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தலர்
குறிப்பு: இந்த மாவை குறைந்தது 6 மாதங்கள் வைத்திருந்து உபயோகிக்கலாம். இந்த மாவில் திட்டமாக தண்ணீர் சேர்த்து, புளிக்காத இட்லிமாவு ஒரு கரண்டி சேர்த்தால், பஜ்ஜி நன்றாக உப்பிவரும். காய்கறிகள் மட்டுமல்லாமல்; பிரெட், அப்பளம், பனி ஆகியவற்றிலும்கூட இந்த மாவில் பஜ்ஜி செய்யலாம்.
அரைத்த மாவு பஜ்ஜி
தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு.
தலா 3/4 கப், பச்சரிசி, உளுந்தம்பருப்பு - தலா 1/4 கப், மிளகாய்வற்றல் - 5, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தலா 1/4 ஸ்பூன், விருப்பமான காய்கறிகள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை: பருப்பு, அரிசி வகைகளை, தனித்தனியாக 1 மணிநேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். அவற்றுடன், மிளகாய்வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பஜ்ஜிமாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்யை காயவைத்து, நறுக்கிய காய்கறிகளை மாவில் தோய்த்து, எண்ணெய்யில் போடவும். இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு: தஞ்சாவூர் ஸ்பெஷல் பஜ்ஜி இது. ‘சலவை சட்னி'யுடன் பரிமாறலாம்!
வெஜிடபிள் ரிங்க்ஸ்
தேவையானவை: கடலைமாவு, அரிசிமாவு, மைதாமாவு, சோளமாவு - தலா 1/4 கப்பு வெங்காயம், சிவப்பு, பச்சை, மஞ்சள் குடைமிளகாய்கள், கத்தரிக்காய் (உள்பகுதியை எடுத்து, வளையங்களாக நறுக்கியது) - தேவைக்கு, மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. 1/4 ஸ்பூன்,
செய்முறை: நறுக்கிய காய்கறிகளை தட்டில் தனித்தனியாக வைத்து, சிறிதளவு உப்பு கலந்துவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவுவகைகளைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, கலக்கவும். சூடான எண்ணெய்யை கடாயிலிருந்து எடுத்து, ஒரு குழிக்கரண்டி அளவு ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பஜ்ஜிமாவுப் பதத்துக்குக் கரைக்கவும். இதில் காய்கறிகளைத் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெய்யில் போட்டு, பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: இந்த ரிங்க்ஸை அப்படியே சாப்பிடலாம். புதினா, உப்பு, பச்சைமிளகாய், சர்க்கரை, எலுமிச்சைச்சாறு சேர்த்து, அரைத்தெடுத்த சட்னியுடனும் பரிமாறலாம்.
டபுள் டெக்கர் பஜ்ஜி
தேவையானவை: பிரெட் துண்டுகள் 8, உருளைக்கிழங்கு - 3, பனீர் துருவல் - 1/4 கப் இஞ்சித்துருவல், பூண்டுத்துருவ பச்சைமிள காவங்காயம், பொடியாக நறுக்கி அடிக்காய்த்துண்டுகள் - தவை 2. பூல் மாவிற்கு: காலை மா (பொடியாக நறுக்களை மாங்காய்ண்ணெய் - தேவைக்கு ரீமத்மாவிற்கு: கடலைமாவு - 1 கப், அரிசிமாவு
சோளமாவு - தலா 1/4 கப், மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்."
செய்முறை: மேல்மாவுப் பொருள்களுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து, கரைத்துவைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும். இதனுடன் இஞ்சித்துருவல், உடுத்துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய், பச்சைமிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கலந்துகொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, குறுக்கே முக்கோண வடிவில் வெட்டவும். உருளைக்கிழங்குக் கலவையை 8 சம அளவு உருண்டைகளாக்கவும். அதனுள் பனீர் துருவலை வைத்து மூடி, உள்ளங்கையில் அழுத்தி, தட்டையாக்கவும். இதை, 2 பிரெட் துண்டுகளின் நடுவே வைத்து, கைகளால் அழுத்தி, கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி, பொரித்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக