எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு&கொள்ளுக் குழம்பு&மிளகுக் குழம்பு&ஆல் இன் ஆல் குழம்பு&தக்காளிக் குழம்பு&வேப்பம்பூ குழம்பு&வெந்தயக் குழம்பு&உருன்டைக் குழம்பு
எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு-1
தேவையான பொருட்கள்: சிறிய கத்தரிக்காய்-/4 கிலோ, தேங்காய்த்
துருவல்-3 டேபிள்ஸ்பூன், புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி- /4டீஸ்பூன், உப்பு-1/2 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி ஒரு டீஸ்பூன்
வறுத்து அரைக்க: மிளகாய் வற்றல்-8, கடலைப்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-2 டேபிள்ஸ்பூன், தனியா-2 டீஸ்பூன், பெருங்காயப்பொடி- 1/½ டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, தாளிக்க கடுகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கத்தரிக்காயை, காம்பு சிறிது விட்டு நறுக்கி, அடிப்பக்கம் மட்டும்
கொஞ்சமாக கத்தரியை நான்காக பிளக்கவும். வறுத்து அரைத்தபொடியை கத்தரிக்காயில் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விட்டு, எண்ணெய்க் கத்தரிக்காய் செய்வது போன்று எண்ணெயில் வதக்கவும். நன்றாக வதங்கினதும் அதை தனியாக வைக்கவும். புளிபேஸ்ட், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அத்துடன் மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து 4 கப் தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து, ரெடியான கத்தரிகளைப் போடவும்
கொள்ளுக் குழம்பு
தேவையான பொருட்கள்: கொள்ளு-1/2 கப், மிளகாய் வற்றல்-6, சுக்கு-
சிறிய துண்டு, பெருங்காயம்-1/4 டீஸ்பூன், புளி பேஸ்ட்- 2 டீஸ்பூன், உப்பு-1 1/2 டீஸ்பூன், தாளிக்க-கடுகு, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கொள்ளு, மிளகாய் வற்றல், சுக்கு பெருங்காயம் எல்லாவற்றையும்
வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும். 2 கப் தண்ணீரில் புளிபேஸ்ட், உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்தவுடன், அரைத்த பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கும் புளித்தண்ணீரில் கொதிக்க வைக்கவும். கொள்ளுப் பொடியை அப்படியே பொடியை போட்டால் கொதிக்கும் குழம்பில் கட்டி தட்டி விடும். இறக்கி வைத்து கடுகு தாளிக்க வேண்டும். இந்தக் காரக் குழம்பு உடம்பு இளைக்க உதவும்.
மிளகுக் குழம்பு
தேவையான பொருட்கள்: மிளகு 2 டேபிள்ஸ்பூன், சீரகம்-2
டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், உப்பு -1½ தேக்கரண்டி. புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம் துண்டுகள் சேர்த்து-2கப்
தாளிக்க: எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் தலா-½ தேக்கரண்டி. கறிவேப்பிலை கொஞ்சம்.
செய்முறை: மிளகு, சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
கடுகு, வெந்தயம், தாளித்து அத்துடன் பூண்டு, வெங்காயம், தக்காளி துண்டுகளுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் புளி பேஸ்ட், உப்பும் சேர்த்து 2 கப் தண்ணீருடன் கொதிக்க வைக்கவும். மஞ்சள் தூளும் சேர்க்கவும். தக்காளி நன்றாகக் கரைந்ததும், மிளகு, சீரகப் பொடிதூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இந்த மிளகு காரக்குழம்பு ஜுரம் வந்தவர்களுக்கும். பிரசவித்த தாய்மார்களுக்கும் நல்லது.
ஆல் இன் ஆல் குழம்பு
தேவையான பொருட்கள்: மணத்தக்காளி வத்தல், சுண்டைக்காய் வத்தல்,
வேப்பம்பூ தலா ஒரு டேபிள்ஸ்பூன், புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், வத்தல் வறுக்க -எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு ஒரு டீஸ்பூன், வத்தக் குழம்புப் பொடி-3 டீஸ்பூன்.
வத்தக்குழம்புப் பொடி செய்ய: மிளகாய் வற்றல்
உபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வந்தயம், வேர்க்கடலை 10, कुणी - 2 தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன், வற்றைத் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.
செய்முறை: வத்தல் வகைகளையும், வேப்பம் பூவையும் எண்ணெயில்
வத்து தனியாக வைக்கவும். புளி பேஸ்ட்டும், உப்பும், 2 கப் தண்ணீரும் ர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது வத்தக் குழம்புப் பொடியையும். வி கொதிக்க வைக்கவும். கடைசியில் வறுத்த வத்தல்களும், வேப்பம் பூவும் சத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். ண்டுமென்பவர்கள் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்
தக்காளிக் குழம்பு
தேவையான பொருட்கள்: தக்காளி-4, வெங்காயம்-2, இஞ்சிபூண்டு
பேஸ்ட்-ஒரு டீஸ்பூன், சோம்பு-2 டீஸ்பூன், புளி-லெமன் அளவு, ம.தூள்-¼ டீஸ்பூன், மிளகாய்த்தூள்-ஒருடீஸ்பூன், எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை-தாளிக்க, உப்பு-தே.அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை
தாளிக்கவும். இதில் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். தண்ணீர்விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு கொதிக்கவிடவும். பின் புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி, சோம்பு தூவி கொதிவந்தவுடன் இறக்கவும்
வேப்பம்பூ குழம்பு
தேவையான பொருட்கள்: வேப்பம்பூ-2 டீஸ்பூன், முழு தனியா-ஒரு
டீஸ்பூன், மிளகு- ½டீஸ்பூன், சீரகம், சோம்பு - தலா 1/4 டீஸ்பூன், புளி-லெமன் அளவு, தக்காளி-3, வெங்காயம் - ஒன்று, ம.தூள்- 1/4 டீஸ்பூன், உப்பு-தே அளவு, எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு-தாளிக்க.
செய்முறை: வேப்பம்பூ, தனியா, மிளகு, சீரகம், சோம்பு இவைகளை
வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை வதக்கி அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகுதாளித்து தக்காளி வெங்காய பேஸ்டை போட்டு புளித் தண்ணீர் விடவும். பின் மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதி வந்தவுடன் வறுத்துப் பொடித்தவற்றைத் தூவி கிளறி இறக்கவும்.
வெந்தயக் குழம்பு
தேவையான பொருட்கள்: வெந்தயம்-ஒரு டீஸ்பூன், தக்காளி-2.
வெங்காயம்-ஒன்று, சீரகம்-½டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா 2, மிளகாய்வற்றல்-6, கடுகு, கறிவேப்பிலை-தாளிக்க, எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன், லெமன்-ஒன்று, உப்பு-தே.அளவு.
செய்முறை: வெந்தயம், சீரகம், மிளகாய்வற்றல், பட்டை, லவங்கம்
இவைகளை வறுத்து தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து அரைத்த வெங்காயம், தக்காளியைப் போட்டு சிறிது தண்ணீர் விடவும். கொதிவந்தவுடன் வறுத்து அரைத்த பேஸ்ட், ம.தூள், உப்பு போட்டு கொதிவந்தவுடன் லெமன் பிழிந்து இறக்கவும்.
உருன்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்: க.பருப்பு- 1/2 ஆழாக்கு, வெங்காயம்-ஒன்று,
இஞ்சி-1/4 இன்ச், ப.மிளகாய்-2, தக்காளி-2, பூண்டு-4 பல், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன், ம.தூள்-1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன், லெமன்-ஒன்று, உப்பு-தே.அளவு, தேங்காய்த் துருவல் டேபிள்ஸ்பூன். ஒரு
செய்முறை: க.பருப்பை ஊறவைத்து பமிளகாய், இஞ்சி சேர்த்து வடைக்கு
அரைப்பது போல் அரைக்கவும். இத்துடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தக்காளியை வதக்கி தண்ணீர் விட்டு உப்பு, ம.தூள், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விடவும். கொதிவந்தபின் வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கொதிக்க விடவும். பின் தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். பின் இறக்கி லெமன் பிழியவும்.
:
கருத்துகள்
கருத்துரையிடுக