குழம்பு வகைகள்--கறிவேப்பிலைக் குழம்பு&கடுகுக் குழம்பு&பூண்டு, சாம்பார் வெங்காயம் குழம்பு&கருலணக்கிழங்கு காரக்குழம்பு&பிரண்டைக் குழம்பு&அவிச்ச குழம்பு
கறிவேப்பிலைக் குழம்பு
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை-ஒரு கப், புளிபேஸ்ட்-2 டீஸ்பூன்,
உப்பு-1½டீஸ்பூன், 2 டீஸ்பூன்-நல்லெண்ணெய், மிளகு, சீரகம், துவரம்பருப்பு- தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம்-சிறிய துண்டு, மிளகாய் வற்றல்-5 (இவற்றை வறுத்து அரைக்கவும்) கறிவேப்பிலையை சிறிது வதக்கவும், பின் அதையும் பொடியுடன் சேர்த்து அரைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து அரைத்ததையும், புளிபேஸ்ட், உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். இதை பத்து நாட்கள் கூட வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. நல்ல பசி எடுக்கும். ஜுரம் வந்த வாய்க்கு நன்றாக இருக்கும்.
கடுகுக் குழம்பு
தேவையான பொருட்கள்: பாகற்காய் அல்லது வெள்ளரிக்காய்
துண்டு துண்டாக நறுக்கியது ஒரு கப், புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், உப்பு - 1½ டீஸ்பூன், மிளகாய்-6, தனியா-1½டீஸ்பூன், வெந்தயம்-ஒரு டீஸ்பூன், வறுத்து அரைக்கவும். கடுகு (பச்சையாக) 2 டீஸ்பூன் பொடி செய்யவும். (வேண்டுமானால் - ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து பொடிக்கலாம்.)
செய்முறை: நறுக்கிய காயை சிறிது எண்ணெயில் வதக்கவும். பின், புளிபேஸ்ட், உப்பு, ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வறுத்து, அரைத்த பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சிறிது ஆறிய பின்பு கடுகுப் பொடியைப் போட்டு கலக்கவும். ஆந்திராவின் ஃபேமஸ் சூப்பர் குழம்பு இது!
பூண்டு, சாம்பார் வெங்காயம் குழம்பு
தேவையான பொருட்கள்: முழுபூண்டு-2, சாம்பார் வெங்காயம்-100 கிராம்.
வற்றல் மிளகாய்-6, தனியா-2 டீஸ்பூன், வெந்தயம் /½ டீஸ்பூன், கடலைப்பருப்பு & கசகசா தலா ஒரு தேக்கரண்டி; தேங்காய்த் துருவல்-ஒரு டேபிள்ஸ்பூன், புளிபேஸ்ட்-2 டீஸ்பூன், உப்பு-1/2 டீஸ்பூன், கடுகு (தாளிக்க) - ஒரு டீஸ்பூன்: கறிவேப்பிலை-கொஞ்சம், எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி
செய்முறை: சாம்பார் வெங்காயம், பூண்டு உரித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய், தனியா, வெந்தயம், கடலைப்பருப்பு கசகசா, தேங்காய்த் துருவல் இவற்றை நன்றாக வறுத்துப் பொடி செய்யவும். மீதி எண்ணெயில் கடுகு தாளித்து, சாம்பார் வெங்காயம், பூண்டு இவற்றை வறுக்கவும். பின் புளிபேஸ்ட், உப்பு போட்டு (2 தம்ளர் தண்ணீருடன்) நன்றாக கொதிக்க வைக்கவும். கொதித்து வெந்ததும், வறுத்து அரைத்த பொடிணப் போட்டு, கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கி வைக்கவும் கமகம் வாசனையுடன் சூப்பரான இந்த காரக்குழம்பு, பசி இல்லாதவர்களைக்கூட சாப்பிடத் தூண்டும்.
கருலணக்கிழங்கு காரக்குழம்பு
தேவையான பொருட்கள்: பிடிகருணை-3 (200 கிராம்), பூண்டு - 10 பல்,
சாம்பார் வெங்காயம் - 6, புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், உப்பு-1/½ டீஸ்பூன், குழம்புப்பொடி- (மிளகாய், தனியா, வெந்தயம், துவரம்பருப்பு) வறுத்து அரைத்த பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சோம்பு எண்ணெய்-2 டீஸ்பூன். - தலா ½ டீஸ்பூன்,
1 லூய்முறை: கருணைக் கிழங்கை (கழுவி) தோலுடன் வேக வைத்து, ஹேலுரித்து, மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிவை வதந்தவம் பருப்பு, வெந்தயம் தாளித்து பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து வசர்தவு மெசித்த கருணையும் சேர்த்துள்ளிண்ப்பு 3வக்களர் தண்ணீர் வந்த்து கொதிக்க வைக்கவும் வந்த்து கொதிக்க வைக்கவும் குழம்பர்த்துட்டியாகி, எண்ணெய் மேல் மிதந்து இறக்கவும்.
பிரண்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்: பிஞ்சு பிரண்டைத் துண்டுகள் - 3 டீஸ்பூன்,
மிளகாய்வற்றல்- 10, தனியா - 2 டீஸ்பூன், புளிபேஸ்ட்-2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எள்-2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல்-2 டீஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், தனியா, எள், தேங்காய்த் துருவல், பிரண்டைத் துண்டுகள் இவற்றைத் தனித் தனியாக வறுத்து அரைக்கவும், புளிபேஸ்டில் 2 கப் தண்ணீரும், உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். வறுத்து, அரைத்த பொடியைச் சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். இது பெண்களுக்கு தருதவிடாயின் போது அவர்கள் இழந்த கால்சியம் சத்துக்களை மீட்டுத்தரும்
அவிச்ச குழம்பு
தேவையான பொருட்கள்: பரங்கிக்காய், அவரை, காராமணி, கொத்தவரை,
கத்தரி, வாழைக்காய், மொச்சை எல்லாம் சேர்த்து 1/2 கிலோ, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி-3, பூண்டுப் பல்-10, புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள்- 2 டீஸ்பூன், மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி-கொஞ்சம்.
தாளிக்க: எண்ணெய்-2 தேக்கரண்டி, கடுகு, சோம்பு, வெந்தயம், சீரகம் - தலா ½ தேக்கரண்டி
செய்முறை: காய்கறிகளை அலம்பி, சிறு துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு புளி, உப்பு சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள் பொடி, நசுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி, மற்ற காய்கறிகள் சேர்த்து 2 விசில் வரும் வரை விடவும். இறக்கி ஆறியதும் தாளித்துக் கொட்டி, சிறிது வற்றியதும் இறக்கினால் காரசார அவித்த குழம்பு ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக