ஸ்பைசி சாட்
ஸ்வீட் கார்ன் 1. மாங்காய்த் ஒரு கட வெங்காயம், தக்காளி, தலா 1 (மூன்றையும் பொடியாக நறுக்கவும் வெள்ளரிக்காய் -ஸ்லைஸ் 1/4 கப் தேங்காய் துருவல் -3டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய குடைமிளகாய் கால் கப், சாட் மசாலா 1 ஸ்பூன். சர்க்கரை ஒரு சிட்டிகை .ஓமப்பொடி 1/4 கப் . காராப்பூந்தி 1/2 கப் .உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
மேலுள்ள பொருட்களில் ஓமப்பொடி, காராபூந்தி தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அகலமான பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
பரிமாறும் போது ஓமப்பொடியையும் காராபூந்தியையும் சேர்த்து கலந்து பரிமாறவும்
பிர்ணி
தேவையானவை:
பால் - ஒரு லிட்டர், பாசுமதி அரிசி - 3 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ரோஸ் வாட்டர் (அ) துளிகள், முந்திரி, பாதாம், ரோஸ் எசன்ஸ் - சில தோலுரித்த பிஸ்தா - தலா 3, உலர்ந்த திராட்சை - தேவையானால், நெய் சிறிதளவு.
செய்முறை:
பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், அரைத்த அரிசி விழுதை சேர்த்து 5 நிமிடம் அப்படியே விடவும். இடையிடையே அவ்வப்போது கிளறிவிடவும். பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் அரிசி வெந்திருக்கிறதா என்பதை பார்த்து இறக்கி விடவும். பின்னர் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
ஹெல்த் கான்ஸியஸாக இருப்பவர்கள் நெய்யில் வறுத்த திராட்சையை தவிர்க்கவும் .
கருத்துகள்
கருத்துரையிடுக