முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

JUST MJ THINGS

  https://amzn.in/d/8LJMgyI

குழம்பு வகைகள்--கறிவேப்பிலைக் குழம்பு&கடுகுக் குழம்பு&பூண்டு, சாம்பார் வெங்காயம் குழம்பு&கருலணக்கிழங்கு காரக்குழம்பு&பிரண்டைக் குழம்பு&அவிச்ச குழம்பு

 கறிவேப்பிலைக் குழம்பு தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை-ஒரு கப், புளிபேஸ்ட்-2 டீஸ்பூன், உப்பு-1½டீஸ்பூன், 2 டீஸ்பூன்-நல்லெண்ணெய், மிளகு, சீரகம், துவரம்பருப்பு- தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம்-சிறிய துண்டு, மிளகாய் வற்றல்-5 (இவற்றை வறுத்து அரைக்கவும்) கறிவேப்பிலையை சிறிது வதக்கவும், பின் அதையும் பொடியுடன் சேர்த்து அரைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து அரைத்ததையும், புளிபேஸ்ட், உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். இதை பத்து நாட்கள் கூட வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. நல்ல பசி எடுக்கும். ஜுரம் வந்த வாய்க்கு நன்றாக இருக்கும். கடுகுக் குழம்பு தேவையான பொருட்கள்: பாகற்காய் அல்லது வெள்ளரிக்காய் துண்டு துண்டாக நறுக்கியது ஒரு கப், புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், உப்பு - 1½ டீஸ்பூன், மிளகாய்-6, தனியா-1½டீஸ்பூன், வெந்தயம்-ஒரு டீஸ்பூன், வறுத்து அரைக்கவும். கடுகு (பச்சையாக) 2 டீஸ்பூன் பொடி செய்யவும். (வேண்டுமானால் - ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து பொடிக்கலாம்.) செய்முறை: நறுக்கிய காயை சிறிது எண்ணெயில் வதக்கவும். பின், புளிபேஸ்ட், உப்பு, ஒரு...

ஸ்பைசி சாட்&பிர்ணி

 ஸ்பைசி சாட் ஸ்வீட் கார்ன் 1. மாங்காய்த் ஒரு கட வெங்காயம், தக்காளி, தலா 1 (மூன்றையும்  பொடியாக நறுக்கவும் வெள்ளரிக்காய் -ஸ்லைஸ் 1/4 கப்  தேங்காய் துருவல் -3டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய குடைமிளகாய் கால் கப், சாட் மசாலா 1 ஸ்பூன்.  சர்க்கரை ஒரு சிட்டிகை  .ஓமப்பொடி 1/4 கப் . காராப்பூந்தி 1/2 கப் .உப்பு தேவைக்கேற்ப  செய்முறை: மேலுள்ள பொருட்களில் ஓமப்பொடி, காராபூந்தி தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அகலமான பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.  பரிமாறும் போது ஓமப்பொடியையும் காராபூந்தியையும் சேர்த்து கலந்து பரிமாறவும்  பிர்ணி  தேவையானவை: பால் - ஒரு லிட்டர், பாசுமதி அரிசி - 3 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ரோஸ் வாட்டர் (அ) துளிகள், முந்திரி, பாதாம், ரோஸ் எசன்ஸ் - சில தோலுரித்த பிஸ்தா - தலா 3, உலர்ந்த திராட்சை - தேவையானால், நெய் சிறிதளவு. செய்முறை: பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை அடுப்பில் வைத்து ஒ...

கமீர் ரொட்டி&காரமல் கஸ்டர்ட்

 கமீர் ரொட்டி செய்முறை: தேவையானவை: கோதுமைமாவு, மைதா மாவு - தலா ஒரு கப் புளித்த தயிர் -5 டேபிள்ஸ்பூன், உப்பு, சோடா உப்பு - தலா அரை டீஸ்பூன். சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வனஸ்பதி -2 ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் தேவையானஅளவு கோதுமை மாவு, மைதா மாவு, வனஸ்பதி ஆகியவற்றை ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும். தயிருடன் உப்பு, சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து நன்றாக அடித்து மாவில் சேர்க்கவும். பின்னர் அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி வைக்கவும். (காலையில் ரொட்டி செய்ய வேண்டுமென்றால் முதல் நாள் இரவே மாவை பிசைந்து வைக்க வேண்டும்) பின்னர் மாவை பூரி போல வட்டமாக திரட்டி, தவாவில் போட்டு ஒரு பக்கம் மட்டும் பாதியளவு வேகவைத்து, மறுபக்கம் முழுவதுமாக வேகவிடவும். பாதி வெந்த பக்கத்தை மட்டும் அடுப்பு தணலில் நேரடியாக போட்டு எடுத்தால் 'புஸ்' என்று உப்பி வரும். மிகவும் ருசியாகவும் மெத்தென்று இருக்கும் இந்த ரொட்டி செய்ய எண்ணெயோ நெய்யோ தேவையில்லை. ரொட்டியை தணலில் போட்டு சுலபமாக எடுக்க உபயோகிக்கும் ஸ்பெஷல் ஜல்லி பாத்திரக் கடைகளில் கிடைக்கிறது. காரமல் கஸ்டர்ட் தேவையானவை முட்டை -...

பம்கின் சீட் - ஸ்பினாச் சூப்&சாரைப்பருப்பு பச்சடி&நியூட்ரி மிக்ஸ் பவுடர்&சாரைப்பருப்பு அல்வா&வெள்ளரி விதை சப்பாத்தி&வெள்ளரி விதை பாயசம்

 பம்கின் சீட் - ஸ்பினாச் சூப் தேவையானவை: பறங்கி விதை - 1/4 கப், பசலைக்கீரை 1 கட்டு, பால் - 2 கப், வெங்காயம் - 1, பூண்டு - 4 பற்கள், வெண்ணெய் - 4 ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - சுவைக்கேற்ப. செய்முறை: பறங்கி விதையை ஊறவைத்து, பால் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். 2 ஸ்பூன் வெண்ணெயை கடாயில் சேர்த்து, பசலைக்கீரை, வெங்காயம், உரித்த பூண்டு சேர்த்து வதக்கி, பால் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில், அரைத்த பறங்கி விதை, அரைத்த கீரை, மீதமுள்ள பால், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும். மீதமுள்ள வெண்ணெயை மேலாகச் சேர்த்து, சூடாகப் பரிமாறவும். குறிப்பு: இதனுடன் பிரெட் துண்டுகள் வைத்து, இரவு உணவாகப் பரிமாறலாம்! சாரைப்பருப்பு பச்சடி தேவையானவை: சாரைப்பருப்பு 1/4 கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1/4 ஸ்பூன், முள்ளங்கி - 1, புளிக்காத கெட்டித்தயிர் - 1 கப், சர்க்கரை - 2 சிட்டிகை, உப்பு - தேவைக்கு, கொத்தமல்லித்தழை அலங்கரிக்க. செய்முறை: தண்ணீர் சேர்க்காமல் தயிரைக் கடைந்து, தேவையான அளவு உப்பு, 2 சிட்டிகை சர்க்கரை சேர்த்து, கலந்துவைக்கவும். சாரைப்பருப்பை ஊறவைத்து, விழுதாக அரைத்து...

Hi friends

 Hi friends அமெஸன் ல நான் சில பொருள்கள் விற்க்க வேண்டி இருந்தது .அந்த லிங் கீழே கொடுத்து ள்ளேன் நீங்களும் வாங்குவீர்கள் என நம்புகிறேன் ).அதனால் நான் Cooking போஸ்ட் போட முடியவில்லை இனிமேல் தினமும் உங்களுக்கு நிறைய சமையல் வகைகள் எழுதி அனுப்புகிறேன். This is  my  Company Brand: JUST MJ THINGS (  https://Amazn.in/d/8LJMgyI https://amzn.in/d/hibY4vu https://amzn.in/d/6VcUSFJ https://amzn.in/d/1lbSxcG https://amzn.in/d/jfKh3Z0   ) I had to sell some items on Amazon. I have given the link below and I hope you will buy it too. That's why I couldn't post Cooking. From now on, I will write and send you many recipes every day.