கார்ன் ஃபிரைடு ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப்,
நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து
ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும்.
கேப்ஸிகம் கறி
தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா
ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி,
நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, கால் கப் தண்ணீர் ஊற்றவும். அடுப்பை குறைந்தத் தணலில் வைத்து, கடாயை மூடி, வேகவிடவும். கலவை நன்றாகச் சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக