பர்பிள் கேபேஜ் பராத்தா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மெலிதாக நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - ரை கப், வெங்காயம் - ஒன்று, சாம்பார் பொடி, நெய் - தலா ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் லாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். க்கிய வெங்காயம், முட்டைக்கோஸ் இரண்டையும் நன்றாக வதக்கி, சாம்பார் பொடி, காய்த்தூள், சாட் மசாலாத்தூள், சிட்டிகை அளவு உப்பு சேர்த்து, முட்டைக்கோஸை நன்றாக பிரட்டி கவிடவும், கோதுமை மாவுடன், நெய், உப்பு சேர்த்துக் கலந்து, வதக்கிய முட்டைக்கோஸ் கலவை, நிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இடவும். வாவை சூடுபடுத்தி, சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் திருப்பிப் பாட்டு, வெந்ததும் எடுக்கவும். 'பறங்கி சப்ஜியுடன் பரிமாறவும்.
பறங்கி சப்ஜி
தேவையானவை: சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பறங்கிக்காய் - ஒரு கப், வெங்காயம், காய்ந்த மிளகாய் தலா ஒன்று, கறிவேப்பிலை - ஒரு கொத்து, மிளகாய்த்தூள், மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், வெல்லம் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பறங்கித் துண்டுகள், மிளகாய்த்தூள், மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி, தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய் நன்றாக வெந்ததும், வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும். கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து, மேலே போட்டு, பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக