முளைகட்டிய பச்சைப்பயறு கிரேவி
தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - 200 கிராம், தக்காளி - 2, வெங்காயம், பச்சைமிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 2 பல், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 2 பட்டை பிரிஞ்சி இலை, அன்னாசி
செய்முறை: பாலில் முந்திரியை ஊறவைத்து, அரைத்து, தனியே
மொக்கு - தலா ஒன்று, எண்ணெய் சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, முளைகட்டியப் பயறு சேர்த்து, நன்றாகப் பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடவும், மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ஸ்டீம் ரிலீஸ் ஆனதும், குக்கரை திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். பின்னர் அடுப்பை ஆன் செய்து, அரைத்த முந்திரியைச் சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி நன்றாகத் திரண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும். நறுக்கிய கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கி, பரிமாறவும்.
பாலக் ரைத்தா
தேவையானவை: ஆய்ந்து, கழுவி, நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், வெங்காயம், பச்சைமிளகாய் தலா ஒன்று, பூண்டு - 2 பல், கெட்டித் தயிர் - அரை- கப், மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம்
சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். அதே கடாயில் கீரையைப் போட்டு லேசாக வதக்கி, தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பூண்டுப் பல், மிளகாய் சேர்த்து வேக விடவும். வெந்ததும், ஆறவைத்து, தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும். ஒரு பௌலில், தயிர், உப்பு, சர்க்கரை, வெங்காயம், அரைத்த கீரை என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மேலாக மிளகாய்த்தூளைத் தூவி, பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக