கேப்ஸிகம் ரைஸ்
வைத்த பாசுமதி சாதம்,நறுக்கிய குடைமிளகாய் தலா ஒரு கப், பச்சைமிளகாய், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தலா 2, சீரகம் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய்
விட்டு, காய்ந்ததும், சீரகம் தாளித்து, பிரிஞ்சி இலை, ஏலக்காய் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பச்சைமிளகாயை வதக்கி, நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சாதம், உப்பு, நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுகினி தால்
தேவையானவை: வேகவைத்த பாசிப்பருப்பு - முக்கால்
கப், சுகினி, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் தலா ஒன்று, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, நெய், சாம்பார் பொடி, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,
கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய சுகினியை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி, நெய் ஊற்றி, நறுக்கிய கொத்துமல்லித்தழைத் தூவி, பரிமாறவும்.
ஸ்டஃப்டு பாலக் பராத்தா
மேல் மாவுக்கு தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. ஸ்டஃப் செய்ய: பாலக்கீரை - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று, மாங்காய்த்தூள், மிளகாய்த்தூள், கரம்
மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடலை மாவு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன். செய்முறை: பாலக்கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மாங்காய்த்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிரட்டி, கீரையைச் சேர்க்கவும். கீரை வதங்கும்போது, கடலைமாவு, உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவாகப் பிசைந்துக்கொள்ளவும். மேலே சிறிதளவு எண்ணெய் தடவி, காற்று புகாத டப்பாவில் 20 நிமிடம் வைக்கவும். மாவு நன்றாக ஊறியதும், சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இட்டு, அதில் கீரை மசாலாவை சிறிதளவு பரத்திவைக்கவும். அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து, ஓரங்களை, விரல்களில் தண்ணீரைத் தொட்டு ஒட்டி, சூடான தவாவில் போடவும், எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும், விரும்பிய வடிவங்களில் நறுக்கி, 'முளைகட்டிய பச்சைப்பயறு பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக