முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

பர்பிள் கேபேஜ் பராத்தா&பறங்கி சப்ஜி

 பர்பிள் கேபேஜ் பராத்தா தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மெலிதாக நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - ரை கப், வெங்காயம் - ஒன்று, சாம்பார் பொடி, நெய் - தலா ஒரு டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் லாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். க்கிய வெங்காயம், முட்டைக்கோஸ் இரண்டையும் நன்றாக வதக்கி, சாம்பார் பொடி, காய்த்தூள், சாட் மசாலாத்தூள், சிட்டிகை அளவு உப்பு சேர்த்து, முட்டைக்கோஸை நன்றாக பிரட்டி கவிடவும், கோதுமை மாவுடன், நெய், உப்பு சேர்த்துக் கலந்து, வதக்கிய முட்டைக்கோஸ் கலவை, நிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இடவும். வாவை சூடுபடுத்தி, சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் திருப்பிப் பாட்டு, வெந்ததும் எடுக்கவும். 'பறங்கி சப்ஜியுடன் பரிமாறவும். பறங்கி சப்ஜி தேவையானவை: சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பறங்கிக்காய் - ஒரு கப், வெங்காயம், காய்ந்த மிளகாய் தலா ஒன்று, கறிவேப்பிலை - ஒரு கொத்து, மிளகாய்த்தூள், மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்...

மசாலா இட்லி&கத்தரிக்காய் சட்னி

 கத்தரிக்காய் சட்னி தேவையானவை: சின்ன சைஸ் கத்தரிக்காய் - 4, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - கோலி அளவு, கடுகு, வெள்ளை முழு உளுந்தம் பருப்பு - தலா முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், தக்காளியை நன்றாக வதக்கி ஆற விடவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கடுகு, கறிவேப்பிலையை தாளித்துச் சேர்த்து, பரிமாறவும். மசாலா இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, கறிவேப்பிலை ஒரு கொத்து, மாங்காய்த்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சென்னா மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: மினி ...

புரக்கோலி புலாவ்&லெமன்-வெஜ் இடியாப்பம்

 புரக்கோலி புலாவ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புரக்கோலி, வெங்காயம், பச்சைமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு தலா ஒரு டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு - தலா ஒன்று, எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப செய்முறை: புரக்கோலியை நறுக்கி, சுத்தப்படுத்தி கழுவி வைக்கவும். மிதமான வெந்நீரில், சிறிதளவு உப்பு சேர்த்து, சுத்தப்படுத்திய புரக்கோலியைப் போடவும். சிறிது நேரம் கழித்து, தண்ணீரை வடித்து விடவும். பாசுமதி அரிசியைக் கழுவி, 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் இஞ்சி-புண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய பச் ைளகாம், புரக்கோலி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு, ஒன்றே கால் ரல் டுண்ணி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அரிசியைச் சேர்த்து, குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்குவு வந்தகம். அரிசி ஆனத...

முளைகட்டிய பச்சைப்பயறு கிரேவி&பாலக் ரைத்தா

 முளைகட்டிய பச்சைப்பயறு கிரேவி தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - 200 கிராம், தக்காளி - 2, வெங்காயம், பச்சைமிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 2 பல், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 2 பட்டை பிரிஞ்சி இலை, அன்னாசி செய்முறை: பாலில் முந்திரியை ஊறவைத்து, அரைத்து, தனியே மொக்கு - தலா ஒன்று, எண்ணெய் சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, முளைகட்டியப் பயறு சேர்த்து, நன்றாகப் பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடவும், மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ஸ்டீம் ரிலீஸ் ஆனதும், குக்கரை திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். பின்னர் அடுப்பை ஆன் செய்து, அரைத்த முந்திரியைச் சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி நன்றாகத் திரண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும். நற...

கேப்ஸிகம் ரைஸ்&சுகினி தால்&ஸ்டஃப்டு பாலக் பராத்தா

 கேப்ஸிகம் ரைஸ் வைத்த பாசுமதி சாதம்,நறுக்கிய குடைமிளகாய் தலா ஒரு கப், பச்சைமிளகாய், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தலா 2, சீரகம் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், சீரகம் தாளித்து, பிரிஞ்சி இலை, ஏலக்காய் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பச்சைமிளகாயை வதக்கி, நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சாதம், உப்பு, நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுகினி தால் தேவையானவை: வேகவைத்த பாசிப்பருப்பு - முக்கால் கப், சுகினி, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் தலா ஒன்று, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, நெய், சாம்பார் பொடி, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய சுகினியை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடவும். இர...