புரோக்கலி பாதாம் சூப்
தேவை: புரோக்கலி (பச்சை நிற காலிஃபிளவர்) - 1 கப், பாதாம் 10. இஞ்சி - 1 சிறிய துண்டு, பூண்டு - 3 பல், வெண்ணெய் / எண்ணெய் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, தக்காளி 2,உப்பு - தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: பாதாமை தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் வெண்ணெய் / எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, புரோக்கலி சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும். பரிமாறும்போது தேவையான அளவு தண்ணீர், பாதாம் அரைத்த விழுது, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும்
பி.கு
: இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த சூப்.
நூடுல்ஸ் சூப்
தேவை: நூடுல்ஸ் 50 கிராம், காளான்கள் - ½ கப், அன்னாசிப் பூ - 1, பட்டை - 1 துண்டு, கிராம்பு -3, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் 1, பூண்டு 2 பல், இஞ்சி 2 இஞ்ச் துண்டு, வினிகர் - 1 டீஸ்பூன், சோயா சாஸ் - ½ டீஸ்பூன், துளசி இலை - 5, வெங்காயத்தாள் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கு.
செய்முறை: காளானை சுத்தம் செய்து தண்டையும் கொண்டையையும் தனித்தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
நூடுல்சை உப்பு சேர்த்த தண்ணீரில் வேகவைத்து, வடித்து எடுத்து வைக்கவும்.
வெறும் கடாயில் பட்டை கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை வாசனை வரும்வரை சூடாக்கி, அதில் காளான் தண்டு பாகத்தை மட்டும் போட்டு, அத்துடன் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் மெல்லிதாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். அத்துடன் காளான் கொண்டை பாகத்தைப் போட்டு வதக்கி, அத்துடன் வடித்து வைத்த காளான் வெந்த நீரை ஊற்றி, காளான் வேகும்வரை கொதிக்கவைத்து, வினிகர், சோயாசாஸ், துளசி இல்லை சேர்த்து கொதித்ததும். மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து அத்துடன் வேகவைத்த நூடுல்சை சேர்த்து பரிமாறவும்.
பாகற்காய் சூப்
தேவை: பாகற்காய் - 1, கேரட் - 1, வெங்காயம்
1, பூண்டு - 2 பல், இஞ்சி - சிறு 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 துண்டு, கொத்துமல்லி இலை - கப், எலுமிச்சை சாறு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். அதில் மெல்லிசாக நறுக்கிய பாகற்காய், கேரட் சேர்த்து லேசாக வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
டிப்ஸ்
: இந்த சூப் வயிற்றுப் பூச்சிகளை நீக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக