ஸ்வீட் பொட்டேடோ சூப்
தேவை: சர்க்கரைவள்ளிக் கிழங்குத்துருவல்1/2 கப், பசலைக்கீரை - 1/2 கப், 1/2 டீஸ்பூன் பால் -கப், உப்பு வெண்ணெய் -1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, சீரகம் தேவையான அளவு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் துருவிய சர்க்கரைவள்ளித்துருவல், பொடியாக நறுக்கிய பசலைக்கீரை சேர்த்து, வதக்கி, தண்ணீர் சேர்த்து, வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். பரிமாறும்போது, தேவையான அளவு தண்ணீர், உப்பு மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும். மேலே பிரெஸ்கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.
பி.கு: இனிப்பு கலந்த சுவையுடன் இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
முருங்கைக் கீரை சூப்
தேவை: முருங்கைக்கீரை - 1/2 கப், பெங்களூர் தக்காளி - 4, இஞ்சி - 1 சிறிய துண்டு, வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, வெல்லம் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். அதில் முருங்கைக்கீரையைச் சேர்த்து சற்று வதக்கி, தண்ணீர், வெல்லம் சேர்த்து, வேகவிடவும், பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும். பரிமாறும்போது தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும். மேலே பிரெஸ்கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.
பி. கு : சற்றே இனிப்புச் சுவையுடன்... முருங்கைக்கீரை சேர்த்ததே தெரியாது.
பனங்கிழங்கு சூப்
தேவை: பனங்கிழங்கு -2, தக்காளி -4, இஞ்சி-1 சிறிய துண்டு, பூண்டு-2 பல், வெங்காயம் -1, சீரகம்-1/2 உஸ்பூன் எண்ணெய்-1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு
மிளகுத்தூள் தேவையான அளவு]
செய்முறை: பனங்கிழங்கை தோல், நரம்பு, நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெவை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய பனங்கிழங்கு சேர்த்து சற்று வதக்கி தண்ணீர், உப்பு சேர்த்து, 6 விசில் வரை வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும். பரிமாறும்போது, தேவையான அளவு தண்ணீர், மிளகுத்தூள் சேர்த்து சூபாக்கி பரிமாறவும்.
பி. கு: சீசனில் மட்டுமே செய்து சாப்பிட முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக