வெஜ் மேன்சோ சூப்
தேவை: முட்டைக்கோஸ் (பொடியாக நறுக்கியது ) - 1/2 கப், கேரட் - 1/2 கப், பீன்ஸ் - 1/4 கப், குட மிளகாய் - 1/4 கப், காலிஃபிளவர் - 1/4 கப், காளான் - 1/4 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 1 டீஸ்பூன், இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன், சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன், கொத்துமல்லி இலை - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1 டீஸ்பூன், வினிகர் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், வறுத்த நூடுல்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கு.
செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், காளான், குடமிளகாயைப் போட்டு சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சோயாசாஸ், வினிகர், சோள மாவு ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து காய்கறிகளுடன் ஊற்றி, சற்று கெட்டியானவுடன், உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு வெங்காயத்தாள், கொத்துமல்லி, வறுத்த நூடுல்ஸ் போட்டு பரிமாறவும்.
வல்லாரை கிரீன் சூப்
தேவை: வல்லாரை - 1/2 கப், புதினா - 1/2 கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு -2 பல், இஞ்சி - 1 சிறு துண்டு, வெங்காயம் - 1, சீரகம் - ரு டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும். அதில் வல்லாரை, புதினா சேர்த்து லேசாக வதக்கி, தண்ணீர் சேர்த்து சற்று வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும், பரிமாறுவதற்கு முன், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு சூடாக்கி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
டிப்ஸ் : இந்த சூப் ஞாபகசக்திக்கு நல்லது. சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கும் நலம் தரும்.
நட் சூப்
தேவை : நிலக்கடலை (பச்சையாகஉரித்தது) - 1/2 கப், தேங்காய்த்துருவல் 1/2 கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1, சீரகம் 1/2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. மிளகுத்தூள் தேவையான அளவு.செய்முறை: தேங்காய்த்துருவலை அரைத்து பால் எடுத்து வைக்கவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் உரித்த வேர்க்கடலை சேர்த்து வதக்கவும், தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும், பரிமாறும்போது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்
டிப்ஸ்: புரதம் நிறைந்த சூப்.
மரவள்ளி - கேரட் சூப்
தேவை: மரவள்ளிக்கிழங்கு துண்டுகள் - 1/4 கப், கேரட் துருவல் - 1/2 கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், வெங்காயம் - 1, சீரகம் - 1/2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. மிளகுத்தூள் ரு தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி, பால் எடுத்து வைக்கவும்.
கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, சீரகம், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து சற்று வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து, ஒரு கடாயில் ஊற்றி, மரவள்ளிக்கிழங்கு பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சூடாக பரிமாறவும்.
பி.கு : மரவள்ளிக்கிழங்கு பால் கொதிக்கும்போது சீக்கிரம் கெட்டியாகி விடும். அதனால் நிறைய நீர் விட்டு கலக்கவும்.
டிப்ஸ்: இந்த சூப் வளரும் குழந்தைகளுக்கு அதிக சக்தியை தரும். பசியாற்றும்.
கருத்துகள்
கருத்துரையிடுக