கோதுமை போண்டா
தேவையானவை : கோதுமை மாவு
2 கப், அரை டீஸ்பூன், 20 உளுந்து மாவு - அரை கப், உப்பு தேங்காய்த்துருவல் - 1 கப், சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 2, 4, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து நன்றாக
கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துத் தளரப் பிசையவும். 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, ஆறியதும், மாவில் கொட்டிப் பிசையவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, மாவை எலுமிச்சை அளவில் உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
மெலன் சீட் சப்ஜி
தேவையானவை: கிருணிப்பழ விதைகள் - 1/2 கப், பனீர் துண்டுகள் - 1 கப், தக்காளி, வெங்காயம் - தலா 2, பூண்டு 4 பற்கள், கரம் மசாலா, தனியாத்தூள் - 2 ஸ்பூன், வெண்ணெய் - 3 ஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, கசூரி மேத்தி - 1 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க.
செய்முறை : கிருணிப்பழ விதைகளை ஊறவைத்து, அரைக்கவும். 2 ஸ்பூன் வெண்ணெயை கடாயில் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன், அரைத்த கிருணி விதை விழுது, பனீர் துண்டுகள், உப்பு, தனியாத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கசூரி மேத்தியை கைகளால் கசக்கித் தூவவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து, பரிமாறவும்.
குறிப்பு: மெலன் விதையில், வைட்டமின் 'ஏ', இரும்புச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன!
ஆளி விதை கேக்
தேவையானவை: ஆளி விதை,
கோதுமை மாவு, பாதாம், நாட்டுச் சர்க்கரை, பால் - தலா 1 கப், வெண்ணெய் - 1/4 கப், கோகோ பவுடர் - 3 ஸ்பூன், வெண்ணிலா எசன்ஸ், சோடா - தலா 1/2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன், உப்பு - சிட்டிகை.
செய்முறை: ஆளி விதை, பாதாம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக மிக்ஸியில் பொடித்து, சலிக்கவும். கோதுமை மாவு, உப்பு, கோகோ பவுடர், ஆப்ப சோடா உள்ளிட்டவற்றை சேர்த்து, சலிக்கவும். இதை, சலித்த பாதாம் கலவையுடன் சேர்க்கவும்.இக்கலவையுடன், உருக்கிய வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெண்ணெய்த் தடவியப் பாத்திரத்தில் இவற்றை ஊற்றி, மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: 'மைக்ரோவேவ் அவன்' இல்லாவிட்டால், குக்கரில் வேகவைக்கலாம். பக்கவாதம் உள்ளவர்கள், ஆளி விதையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக