பீட்ரூட் பக்கோடா
தேவையானவை: பீட்ரூட் - 1, கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள் பூன், சோம்பு, உப்பு, மிளகாய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, வங்காயம் - 1, வெண்ணெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான
செய்முறை: பீட்ரூட்டின் தோலை சீவித் துருவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோம்பு, மிளகாய்த்தூள் ஆகியற்றை நன்றாக கலந்து, வெண்ணெய், பீட்ரூட் துருவல், நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்க்கவும். பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து, பிரட்டினாற்போல பிசைந்து, காய்ந்த எண்ணெயில் மாவை உதிர்த்து, வேகவைத்து எடுக்கவும். புதினா ஈட்னியுடன் சூடாக பரிமாறவும்.
சில்லி பரோட்டா
தேவையானவை; பரோட்டா - 2 (சிறிய சதுர வடி துண்டுகளாக நறுக்கவும்). வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், ஃபுட் கலர் (சிவப்பு வண்ணம்) -1 சிட்டிகை, உப்பு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை: ஒரு பாவில் எண்ணெயை காயவைத்து, பரோட்டா
துண்டுகளை போட்டு மொறுமொறுப்பாக பொரிந்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு, அதே பாவில் வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பின்னர் பொரித்த பரோட்டா துண்டுகள், ஃபுட் கலர் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். டொமேட்டோ சாஸுடன் சூடாக பரிமாறவும்.
பனானா டிலைட்
தேவையானவை: செவ்வாழைப்பழம் - 1, ரஸ்தாளி - 1, தேன்கதலி / கற்பூரவள்ளி பழம் - 1, சிறுமலைப்பழம் - 1, தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: செவ்வாழை, ரஸ்தாளி, தேன்கதலி, சிறுமலைப்பழம் ஆகியவற்றின் தோலை உரித்து, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். அகலமான தட்டில் வாழைப்பழத் துண்டுகளைப் பரப்பி, அவற்றின்மீது தேங்காய்த்துருவலைத் தூவவும். அதன்மீது தேனை ஊற்றி, ஏலக்காய்த்தூளை தூவி, பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக