சீமை இலந்தை சூப்
தேவை : சீமை இலந்தைப்பழம் (காய் வெட்டாக எடுத்துக்கொள்ளவும்) 10, ஆப்பிள் 13 பழம் இஞ்சி - 1 சிறிய துண்டு, வெண்ணெய் - 1 டீஸ்பூன், பால் -கப், உப்பு -தேவையான அளவு மிளகுத்தாள் - தேவையான அளவு.
செய்முறை: சீமை இலந்தைப்பழத்தை நன்கு தண்ணீரில் வேகவைத்து, விதை, தோல்நீக்கி வைக்கவும்.
கடாயில் வெண்ணெயை சூடாக்கி, அதில், தோல் நீக்கி நறுக்கிய ஆப்பிள், இஞ்சி சேர்த்து சற்று வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து, சற்று வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து, வேகவைத்த சீமை இலந்தைப்பழத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும், பரிமாறும்போது பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும். மேலே பிரெஷ்கிரீம் அல்லது வறுத்த பிரெட் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.
பி.கு: சீமை இலந்தைப்பழத்தை பலர் விரும்புவது இல்லை. ஆனால் இரும்புச்சத்தும் கால்சியமும் கொண்ட இப் பழத்தை சூப் செய்து உண்ணலாம்.
நிலக்கடலை சூப்
தேவை:பச்சை வேர்க்கடலை (வேகவைத்தது) - 1/2 கப், பெங்களூர் தக்காளி - 2, பூண்டு 6 பல், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1, சீரகம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், 2 பல் பூண்டு, சீரகம், நறுக்கிய தக்காளி, வேகவைத்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தண்ணீர், உப்பு சேர்த்து, மூடிவைத்து பத்து நிமிடம் வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அத்துடன் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு சூடாக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்தும் பரிமாறலாம்.
தேங்காய் மிளகு சூப்
தேவை: தேங்காய்ப்பால் 2 கப், காரட், பீன்ஸ், கோஸ், காலிஃபிளவர் (நீளமான துண்டுகளாக நறுக்கவும்) - கப், இஞ்சி - 1 சிறிய துண்டு (நீளமான துண்டுகளாக நறுக்கவும்). பூண்டு - 2 பல்(பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், மிளகு - ½ ஸ்பூன், வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் காய்கறிகள், இஞ்சி சேர்த்து, தண்ணீர், உப்பு சேர்த்து, மூடிவைத்து பத்து நிமிடம் வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் தேங்காய்ப்பால், மிளகுத்தூள் சேர்த்து பொங்கியதும் சூடாக பரிமாறவும்.
பி.கு: இருமலுக்கு இதமான சூப். வயிற்றுப்புண் இருப்பவர்கள் மிளகாய் குறைத்துக்கொள்ளலாம்.
பீட்ரூட் பேசில் சூப்
தேவை: பீட்ரூட் துருவல் - 1 கப், தக்காளி - 2, துளசி இலை - கப், இஞ்சி - 1 சிறிய துண்டு, வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, சீரகம் ஸ்பூன், உப்பு தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, சீரகம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் சுத்தம் செய்த துளசி இலை சேர்த்து, அத்துடன் தண்ணீர், சேர்த்து வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும். பரிமாறும்போது தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும்.
பி. கு: சளி, காய்ச்சல் போன்ற அசௌகரியம் ஏற்படும்போது இந்த சூப் இதம் தரும். சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
# என்னிடம் அதிகமான நண்பர்கள் சூப் வகைகள் கேட்டுக்கொண்டதால்எழிதியுள்ளேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக