கேரட் சூப்
தேவையானவை:
கேரட் - 5, வெங்காயம் ஒன்று, பூண்டு - 4, கொத்துமல்லித்தழை ஒரு கைப்பிடியளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம் (தேவையென்றால்) - 5, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:
கேரட், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கி வைத்துள்ள கேரட், பூண்டு, வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் கொத்துமல்லி, பாதாம் சேர்த்து லேசாக கிளறி. கலவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து தனியாக வைத்துக்கொண்டு, காய்கறிளை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன், காய்கறிகளை வடிகட்டிய தண்ணீரை சேர்த்து கலந்து குக்கரில் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிரெட் ஸ்டிக்ஸுடன் சூடாக பரிமாறவும்
.தக்காளி - கிரீம் சூப்
தேவையானவை:
தக்காளி -12, வெங்காயம், செலரி இலை,கேரட் - தலா இன்று, பூண்டு -3 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, மிளகு - 4, ஃபிரெஷ் கிரீம் -2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணெலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். இதில் பிரிஞ்சி இலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு, செலரி இலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு, மிளகு சேர்த்து வதக்கி, கலவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கும் போது பிரிஞ்சி இலை மற்றும் மிளகை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, வடிகட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள், ஃபிரெஷ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக