மூங்தால் சாட்
தேவையானவை: முளைகட்டி வேகரைத்த
பாசிப்பயறு - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்யம் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூை மல்லித்தழை - சிறிதளவு, சாட் மசாலா அல்லது உப்பு சிறிதளவு.
செய்முறை: மேற்காணும் பொருள்கள் அனைத்தையும் அகலமான கிண்ணத்தில் போட்டு, நன்றாக கலந்து பரிமாறவும்.
தேவைப்பட்டால், ஹாட் அண்ட் ஸ்வீட் டொமேட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி கலந்தும் பரிமாறலாம்.
கொத்திம்பிர் வடி
தேவையானவை: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு, தயிர் - தலா கால் கப், இஞ்சி 2 அங்குலத் துண்டு, நறுக்கிய மல்லித்தழை - 2 கப், சர்க்கரை, மிளகாய்த்தூள், எள், - தலா கால் - சீரகம், தனியாத்தான். தலா 1 ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஸ்பூன், கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, தயிர், துருவிய இஞ்சி, அரிசி, நறுக்கிய
பச்சைமிளகாய், உப்பு, சர்க்கரை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எள், தனியாத்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, கடலை மாவுக் கலவையை சேர்க்கவும். மாவு வெந்து வரும் வரை கைவிடாமல் கிளறி, மல்லித்தழை, பொடித்த வேர்க்கடலை சேர்க்கவும். ஒரு தட்டில், ஒரு ஸ்பூன் எண்ணெய் பூசி, கிளறிய கலவையை கொட்டி, சம அளவில் பரப்பவும். நன்றாக ஆறியதும், 2 அங்குல துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். வெட்டிய துண்டுகளை சேர்த்து, மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக