எள் - கடலை சிக்கி
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை
- 1 கப், வெள்ளை எள் - அரை கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலகாய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: வேர்க்கடலையின் தோலை நீக்கி,
ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். அகலமான தட்டில் நெய்த் தடவி வைக்கவும். மீதமுள்ள நெய்யை ஒரு பானில் ஊற்றி, காயவைத்து, சர்க்கரை சேர்த்து, உருகவிடவும். லேசாக உருகி வரும்போது வேர்க்கடலை, எள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை லேசாக இளக்கமாக இருக்கும்போதே இறக்கி, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, சப்பாத்திக் கட்டையா சமன்படுத்தவும். வட்டங்களாகவோ அல்லது சதுரத் துண்டுகளாகவோ விருப்பமான அளவில் வெட்டி எடுத்து பரிமாறவும்.
ஸ்வீட் ஃபிங்கர் சிப்ஸ்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, சர்க்கரை கால் கப், முந்திரி, கிஸ்மிஸ் - தலா 10, எண்ணெய் -
- பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, குச்சி
குச்சியாகச் சீவி, எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். முந்திரி, கிஸ்மிஸையும் இத்துடன் பொரித்துப் போடவும். சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 'முத்துப் பாகு' ரெடி செய்யவும். இதில், பொரித்த உருளை, முந்திரி, கிஸ்மிஸைப் போட்டு நன்றாக புரட்டி கலந்து விடவும்.
குறிப்பு: உதிர் உதிரான இந்த சிப்ஸ், 'இனிப்பு சேவு' போல சுவையாக இருக்கும்!
கருத்துகள்
கருத்துரையிடுக