தட்டு வடை செட்
தேவையானவை: சின்ன சைஸ் தட்டை - 12, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட் தலா 1, மாங்காய் - பாதியளவு, மல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன், சாட் மசாலா 2 டீஸ்பூன், புதினா சட்னி, காரச் சட்னி - தலா கால் கப், எலுமிச்சைச்சாறு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை:வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட், பீட்ரூட், மாங்காயை தோல் சீவி, துருவி, உப்புப் போட்டு கலந்து வைக்கவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். அகலமான தட்டில் ஆறு தட்டைகளைப் பரப்பவும். முதலில் கால் ஸ்பூன் கார சட்னியைத் தடவி, அதன் மேல் பீட்ரூட், கேரட், மாங்காய்க் கலவையை ஒரு ஸ்பூன் வைக்கவும். பிறகு அரை ஸ்பூன் வெங்காயத்தை வைத்து, மல்லித்தழை, சாட் மசாலாவை தூவவும். பிறகு எலுமிச்சைச்சாறை தெளித்து, கால் ஸ்பூன் புதினா சட்னியை வைக்கவும். அதன்மீது மற்றொரு தட்டையை வைத்து மூடி, உடனே பரிமாறவும்.
ஜாலர் அப்பம்
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், முட்டை -
- 2, தேங்காய் - அரை மூடி, உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை கால் கப், எண்ணெய் - 30 மில்லி, தேன் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயைத் துருவி, 2 கப் பால் எடுக்கவும்.
அதில், முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கோதுமை மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, 'பஜ்ஜி மாவு' பதத்தில் நன்றாக கரைக்கவும். நான் ஸ்டிக் தவாவை சூடு செய்து, எண்ணெய் தடவி, ஜாலர் கோனில் மாவை ஊற்றி, வட்ட வட்டமாக மாவு விழும்படி சுழற்றவும். முழுவதும் வலைப்பின்னல் போல வந்ததும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து, தேன் தடவி, சுருட்டிப் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக