டொமேட்டோ கட்லெட்
தேவையானவை: ஆப்பிள் தக்காளி - 8, உருளை, கேரட், பீன்ஸ், பட்டாணி,
காலிஃப்ளவர் கலவை 2 கப், பெரிய வெங்காயம் 1, இஞ்சி - - ப.மிளகாய் - 2, மி.தூள் - 1/2 டீஸ்பூன், மசாலா - - - 1/2 , 1/4 டீஸ்பூன், மல்லித்தழை 1 டேபிள் ஸ்பூன், சீஸ் துருவல், வெண்ணெய் - தலா 1 டீஸ்பூன், வறுத்த முந்திரி -10, மைதா - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியின் மேல்பாகத்தை வெட்டி, உள்ளிருக்கும் சதையை நீக்கவும்.
உருளை, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை சற்றே பெரிதாகவும், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, மல்லித்தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெயில், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, மற்ற காய்கறிகளை வதக்கி, தக்காளிச்சதையை சேர்த்து, மி.தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். பின்னர் வெண்ணெய், சீஸ் துருவல், மல்லித்தழை, வறுத்த முந்திரி சேர்த்து பிசைந்து, தக்காளிக்குள் ஸ்டஃப் செய்து, மேலே சிறிது மைதா பேஸ்ட் வைத்து மூடவும். மீதமுள்ள மைதாவில் உப்பு, மி.தூள் சேர்த்து 'பஜ்ஜி மாவு போல கரைத்து, ஸ்டஃப் செய்த தக்காளியை முழுதாக புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.
கேரட் குல்ஃபி
தேவையானவை: கேரட் - 4 (வேகவைத்துக் கூழாக்கவும்), பால் - 5 கப், சர்க்கரை - 1 கப், பால் பவுடர் - 1/2 கப், பிஸ்தா, முந்திரி, பாதாம் 1 கப் (பொடியாக - நறுக்கவும்),குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா 1 சிட்டிகை, ஆல்மண்ட் எசன்ஸ் - 1 ஸ்பூன், குல்ஃபி மோல்ட் - 12, ஐஸ்க்ரீம் குச்சிகள் - தேவையான அளவு.
செய்முறை : பாலை சுண்டக் காய்ச்சவும். அதில், பால்பவுடரை கரைத்து ஊற்றி,
சர்க்கரை சேர்த்து, சர்கரை கரையும் வரை அடுப்பில் வைக்கவும். பின்னர் இறக்கி ஆறவைத்து, கேரட் விழுதைப் போட்டு, ஏலக்காய்த்தூளை தூவி, ஆல்மண்ட் எசன்ஸ் விட்டு நன்றாக கலக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவைப் போட்டு நன்றாக கலந்து, குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஐஸ்க்ரீம் குச்சியை செருகி, ஃப்ரிட்ஜில் 8 மணி நேரம் வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து, குல்ஃபி மோல்டுகளின் மேல் தண்ணீர் ஊற்றி, வெளியே எடுத்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக