கருணைக்கிழங்கு சாசேஜ்
தேவையானவை: வேகவைத்த கருணைக்கிழங்கு, வேகவைத்த உருளைக்கிழங்கு -
தலா 1, பிரெட் ஸ்லைஸ் - 2, சோம்பு, சீரகம், தனியா, மிளகு - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி துருவல், பூண்டு துருவல் - தலா அரை டீஸ்பூன், சீஸ் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, தக்காளி சாஸ் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை வதக்கி ஆறவிடவும். இதனுடன், வேகவைத்த கருணை, உருளை, ஓரம் நீக்கிய பிரெட் ஸ்லைஸ் சேர்க்கவும். சோம்பு, சீரகம், தனியா, மிளகை வறுத்து பொடி செய்து, உப்போடு போடவும். தக்காளி சாஸ், துருவிய சீஸ் சேர்த்து சாசேஜ்களாக உருட்டவும். தட்டையான பேனில் எண்ணெய் ஊற்றி, பிடிகருணைபோல் உருட்டி, வேகவைத்து, பொரித்தெடுக்கவும்.
ஃப்ரூட் பாப்சிக்கிள்
தேவையானவை: மாம்பழம் - பாதியளவு, கிவிப்பழம் - 1, செர்ரி - 6, ஆப்பிள் -பாதியளவு, பப்பாளி - 6 துண்டுகள், எலுமிச்சை ஜூஸ் - ஒரு கப், தேன் - 2 - டீஸ்பூன், பாப்சிக்கிள் மோல்ட் / டம்ளர் - 2, நடுவில் செருக - 2 ஐஸ்க்ரீம் ஸ்டிக்குகள் அல்லது ஸ்பூன்கள்.
செய்முறை: எலுமிச்சை ஜூஸில் தேனை கலந்து வைக்கவும். பாப்சிக்கிள் மோல்டில், தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிய கிவிப்பழம், மாம்பழம், ஆப்பிள், பப்பாளி, செர்ரி இந்த வரிசையில் போட்டு, எலுமிச்சை ஜூஸை ஊற்றவும். பின்னர் ஐஸ்க்ரீம் ஸ்டிக்கை செருகி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் குளிரவைக்கவும். மோல்டை பைப் தண்ணீரில் காட்டினால், ஃப்ரூட் பாப்சிக்கிள் பிரிந்து வரும். பின்னர் எடுத்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக