முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

மூங்தால் சாட்&கொத்திம்பிர் வடி

 மூங்தால் சாட்  தேவையானவை: முளைகட்டி வேகரைத்த  பாசிப்பயறு - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்யம் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூை மல்லித்தழை - சிறிதளவு, சாட் மசாலா அல்லது உப்பு சிறிதளவு.  செய்முறை: மேற்காணும் பொருள்கள் அனைத்தையும் அகலமான கிண்ணத்தில் போட்டு, நன்றாக கலந்து பரிமாறவும்.  தேவைப்பட்டால், ஹாட் அண்ட் ஸ்வீட் டொமேட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி கலந்தும் பரிமாறலாம். கொத்திம்பிர் வடி  தேவையானவை: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு, தயிர் - தலா கால் கப், இஞ்சி 2 அங்குலத் துண்டு, நறுக்கிய மல்லித்தழை - 2 கப், சர்க்கரை, மிளகாய்த்தூள், எள், - தலா கால் - சீரகம், தனியாத்தான். தலா 1 ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஸ்பூன், கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.  செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, தயிர், துருவிய இஞ்சி, அரிசி, நறுக்கிய  பச்சைமிளகாய், உப்பு, சர்க்கரை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எள், தனியாத்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். கடாயில் 2 ஸ்பூன...

எள் - கடலை சிக்கி&ஸ்வீட் ஃபிங்கர் சிப்ஸ்

 எள் - கடலை சிக்கி தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 1 கப், வெள்ளை எள் - அரை கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலகாய்த்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: வேர்க்கடலையின் தோலை நீக்கி, ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். அகலமான தட்டில் நெய்த் தடவி வைக்கவும். மீதமுள்ள நெய்யை ஒரு பானில் ஊற்றி, காயவைத்து, சர்க்கரை சேர்த்து, உருகவிடவும். லேசாக உருகி வரும்போது வேர்க்கடலை, எள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை லேசாக இளக்கமாக இருக்கும்போதே இறக்கி, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, சப்பாத்திக் கட்டையா சமன்படுத்தவும். வட்டங்களாகவோ அல்லது சதுரத் துண்டுகளாகவோ விருப்பமான அளவில் வெட்டி எடுத்து பரிமாறவும். ஸ்வீட் ஃபிங்கர் சிப்ஸ் தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, சர்க்கரை கால் கப், முந்திரி, கிஸ்மிஸ் - தலா 10, எண்ணெய் - - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, குச்சி குச்சியாகச் சீவி, எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். முந்திரி, கிஸ்மிஸையும் இத்துடன் பொரித்துப் போடவும். சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 'முத்துப் பாகு' ரெடி செய்யவு...

தட்டு வடை செட்&ஜாலர் அப்பம்

 தட்டு வடை செட் தேவையானவை: சின்ன சைஸ் தட்டை - 12, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட் தலா 1, மாங்காய் - பாதியளவு, மல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன், சாட் மசாலா 2 டீஸ்பூன், புதினா சட்னி, காரச் சட்னி - தலா கால் கப், எலுமிச்சைச்சாறு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன். செய்முறை:வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட், பீட்ரூட், மாங்காயை தோல் சீவி, துருவி, உப்புப் போட்டு கலந்து வைக்கவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். அகலமான தட்டில் ஆறு தட்டைகளைப் பரப்பவும். முதலில் கால் ஸ்பூன் கார சட்னியைத் தடவி, அதன் மேல் பீட்ரூட், கேரட், மாங்காய்க் கலவையை ஒரு ஸ்பூன் வைக்கவும். பிறகு அரை ஸ்பூன் வெங்காயத்தை வைத்து, மல்லித்தழை, சாட் மசாலாவை தூவவும். பிறகு எலுமிச்சைச்சாறை தெளித்து, கால் ஸ்பூன் புதினா சட்னியை வைக்கவும். அதன்மீது மற்றொரு தட்டையை வைத்து மூடி, உடனே பரிமாறவும். ஜாலர் அப்பம் தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், முட்டை - - 2, தேங்காய் - அரை மூடி, உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை கால் கப், எண்ணெய் - 30 மில்லி, தேன் - சிறிதளவு. செய்முறை: தேங்காயைத் துருவி, 2 கப் பால் எடுக்கவும். அதில், முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு...

லெமன் பாஸ்தா &சன்னா வடை

லெமன் பாஸ்தா  தேவையானவை: மிக்ஸட் பாஸ்தா - 2 கப், பெரிய வெங்காயம், கேரட் - தலா 1,  பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், வெண்ணெய், சீஸ் - தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன். - தலா கால் டீஸ்பூன்,  செய்முறை: ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்கவைத்து, பாஸ்தாக்களை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், அடுப்புத் தணலை குறைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, நீரை வடிகட்டி, ஆலிவ் ஆயில் சேர்த்துக் குலுக்கி ஆறவிடவும். பானில் வெண்ணெய், சீஸை சேர்க்கவும். இரண்டும் உருகும்போது சர்க்கரை, உப்பைச் சேர்க்கவும். அதில், நீளமாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி, வெந்த பாஸ்தாக்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர், மல்லித்தழை, மிளகுத்தூள் தூவி, சூடாக பரிமாறவும். சன்னா வடை  தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - 2 கப், மைதா - 2 டேபிள்  ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - கால் கப் வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், - மிளகாய்த்தூள் - கால் ...

டொமேட்டோ கட்லெட் &கேரட் குல்ஃபி

 டொமேட்டோ கட்லெட்  தேவையானவை: ஆப்பிள் தக்காளி - 8, உருளை, கேரட், பீன்ஸ், பட்டாணி,  காலிஃப்ளவர் கலவை 2 கப், பெரிய வெங்காயம் 1, இஞ்சி - - ப.மிளகாய் - 2, மி.தூள் - 1/2 டீஸ்பூன், மசாலா - - - 1/2 , 1/4 டீஸ்பூன், மல்லித்தழை 1 டேபிள் ஸ்பூன், சீஸ் துருவல், வெண்ணெய் - தலா 1 டீஸ்பூன், வறுத்த முந்திரி -10, மைதா - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.  செய்முறை: தக்காளியின் மேல்பாகத்தை வெட்டி, உள்ளிருக்கும் சதையை நீக்கவும்.  உருளை, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை சற்றே பெரிதாகவும், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, மல்லித்தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெயில், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, மற்ற காய்கறிகளை வதக்கி, தக்காளிச்சதையை சேர்த்து, மி.தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். பின்னர் வெண்ணெய், சீஸ் துருவல், மல்லித்தழை, வறுத்த முந்திரி சேர்த்து பிசைந்து, தக்காளிக்குள் ஸ்டஃப் செய்து, மேலே சிறிது மைதா பேஸ்ட் வைத்து மூடவும். மீதமுள்ள மைதாவில் உப்பு, மி.தூள் சேர்த்து 'பஜ்ஜி மாவு போல கரைத்து, ஸ்டஃப் செய்த தக்காளியை முழுதாக புரட்டி, எண்ணெயில் பொரித்தெட...

கருணைக்கிழங்கு சாசேஜ் &ஃப்ரூட் பாப்சிக்கிள்

 கருணைக்கிழங்கு சாசேஜ் தேவையானவை: வேகவைத்த கருணைக்கிழங்கு, வேகவைத்த உருளைக்கிழங்கு - தலா 1, பிரெட் ஸ்லைஸ் - 2, சோம்பு, சீரகம், தனியா, மிளகு - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி துருவல், பூண்டு துருவல் - தலா அரை டீஸ்பூன், சீஸ் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, தக்காளி சாஸ் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை வதக்கி ஆறவிடவும். இதனுடன், வேகவைத்த கருணை, உருளை, ஓரம் நீக்கிய பிரெட் ஸ்லைஸ் சேர்க்கவும். சோம்பு, சீரகம், தனியா, மிளகை வறுத்து பொடி செய்து, உப்போடு போடவும். தக்காளி சாஸ், துருவிய சீஸ் சேர்த்து சாசேஜ்களாக உருட்டவும். தட்டையான பேனில் எண்ணெய் ஊற்றி, பிடிகருணைபோல் உருட்டி, வேகவைத்து, பொரித்தெடுக்கவும்.  ஃப்ரூட் பாப்சிக்கிள் தேவையானவை: மாம்பழம் - பாதியளவு, கிவிப்பழம் - 1, செர்ரி - 6, ஆப்பிள் -பாதியளவு, பப்பாளி - 6 துண்டுகள், எலுமிச்சை ஜூஸ் - ஒரு கப், தேன் - 2 - டீஸ்பூன், பாப்சிக்கிள் மோல்ட் / டம்ளர் - 2, நடுவில் செருக - 2 ஐஸ்க்ரீம் ஸ்டிக்குகள் அல்லது ஸ்பூன்கள். செய்முற...