ஹெல்தி கா அச்சார்
தேவையானவை: மஞ்சள் - 100 கிராம், கடுகு 1 ஸ்பூன், எலுமிச்சைச்சாறு 2 துண்டு, வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவைக்கு. செய்முறை: மஞ்சள், இஞ்சியை தோல் சீவி, மிகப் பொடியாக ஸ்பூன், இஞ்சி - சிறு நறுக்கவும். உப்பு, எலுமிச்சைச்சாறு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர் பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிச் சேர்க்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சுத்தமான பாட்டிலில் அடைக்கவும். குறிப்பு: மஞ்சள் கிடைக்கும் சீசனில் வீட்டுக்கு வீடு இந்த ஊறுகாய் செய்து வைத்துக்கொள்வார்கள். ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வருடம் வரை கெடாமலிருக்கும்!
கஸ்தா
ஆலு தேவையானவை: சின்ன சைஸ் உருளைக்கிழங்கு - 20, தக்காளி - 2, மிகப்பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 ஸ்பூன், சீரகம், சோம்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா - தலா 1 ஸ்பூன், கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் வேகவைத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி, 'பட்டன்' போல செய்யவும்.. பின்னர் அதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தக்காளியை அரைக்கவும். . கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்க்கவும். பின்னர் பொரித்த உருளை, மல்லித்தழை, ஓமப்பொடி சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு: பாம்பே ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் இது!
தாலி பீத்
தேவையானவை:
கோதுமை மாவு, கம்பு மாவு, கடலை மாவு, சோளமாவு - தலா அரை கப், வெங்காயம் - 1, நெய் - 3 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (மிகப் பொடியாக நறுக்கவும்), சீரகம், மஞ்சள்தூள், எள், தனியாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், ஓமம் - தலா 1 ஸ்பூன், வெண்ணெய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா கால் கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: மாவு வகைகள், உப்பு, நெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், எள், ஓமம் சேர்த்து கலக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். தவாவை சூடாக்கி, பிசைந்த மாவை சிறிய ஆரஞ்சுப்பழ அளவு எடுத்து, எண்ணெய்த் தடவிய வாழை இலையில் வைத்து மெல்லிதாக கைகளால் தட்டவும். பின்னர் அதைச் சூடான தவாவில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும். சூடாக இருக்கும்போது, ஸ்பூன் வெண்ணெயை மேலாக சேர்த்து, தயிருடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக