இலை அடை
தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண்டால் மடிப்பதற்கு எளிதாக வரும். மாவை உருண்டையாக எடுத்து, வாழை இலையில் வட்டமாக தட்டிக்கொள்ளவும். அதன் நடுவில் பூரணத்தை வைத்து, இலையை பாதியாக மடித்து, எல்லா பக்கமும் மெதுவாக அழுத்தி 'சீல்' செய்யவும். இதை, இட்லிப் பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால், சுவையான 'இலை அடை' தயார்!
உன்னியப்பம்
தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் அரை கப், இட்லி அரிசி - 2 கப், வாழைப்பழம் - 1, சுக்குத்தூள் - அரை டீஸ்பூன், கருப்பு எள் அரை டீஸ்பூன், நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன். செய்முறை: அரிசியை கழுவி, தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் வரை ஊறவைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, சிறிய தேங்காய்த் துண்டுகளை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். நான்ஸ்டிக் தவாவில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் பாரிஸின் தூள் வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கலந்து, வெல்லப்பாகு தயாரித்து அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைக்கவும். பின்னர் ஊறவைத்த அரிசியில் தண்ணீரை வடிகட்டி விட்டு, அரிசியுடன் வெல்லப்பாகுவை கலக்கவும். வெல்லப்பாகு கலந்த அரிசியை மிக்ஸியில் போட்டு, மாவாக அரைக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், வறுத்த தேங்காய்த் துண்டுகள் மற்றும் வாழைப்பழத்தை பிசைந்து சேர்த்து, மாவு கெட்டியாகும் வரை நன்றாகக் கலக்கவும். கலந்த மாவை 4 முதல் 5 மணி நேரம் வரை மூடி வைக்கவும். பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் நெய்த் தடவி, மாவை ஊற்றி வேகவைக்கவும். இருபுறமும் திருப்பிவிட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால், 'உன்னியப்பம்' தயார்!
ஷாஹி துக்டா
தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - 175 கிராம், தண்ணீர் - 150 மிலி, பால் - 150 மில்லி, நெய் - தேவையான அளவு, உலர் பழக்கலவை - 2 டீஸ்பூன், பிரெட் - 8 துண்டுகள், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 டீஸ்பூன்.செய்முறை: முதலில் 'ரப்டி' செய்ய வேண்டும். இதற்குக் கனமான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தில் பாலை ஊற்றி, சுண்டக் காய்ச்சவும். அடுப்பை சிம்மில் வைத்து நன்கு பாலை கிண்டியபடி, அதன் அளவு பாதியாகும் வரை சுண்ட வைக்கவும். அதில், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பாரிஸின் தூள் வெல்லம் சேர்த்து தனியாக எடுத்து வைக்கவும். அடுத்ததாக, 'சர்க்கரை கரைசல்' செய்யலாம். இதற்கு பாரிஸின் தூள் வெல்லத்தை கடாயில் கொட்டி, தண்ணீர் கலந்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாகக்வைக்கவும். 'பபுள்ஸ்' வந்து கொதிக்க ஆரம்பித்ததும், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் தூவி, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். 'ஷாஹி துக்டா' செய்ய, பிரெட்டின் ஓரங்களை நீக்கி, 'சாண்ட்விச்' போல முக்கோண வடிவில் வெட்டி வைக்கவும். தவாவில் நெய் ஊற்றி சூடாக்கி, பிரெட் துண்டுகளை 'டோஸ்ட்' செய்யவும். பிரெட்டின் இருபுறமும் மொறுமொறுவென பொன்னிறமாக வறுபட்டதும், அதை சர்க்கரைக் கரைசலில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கவும். சர்க்கரைக் கரைசல் சூடாக இருந்தால், குறைவான நேரம் ஊறவைத்தாலே போதுமானது. பின்னர் ஊறவைத்த பிரெட் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன்மீது 'ரப்டி'யை முழுமையாக ஊற்றவும். இதன்மீது உலர் பழக்கலவை, நறுக்கிய பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தூவினால், ராயலான 'ஷாஹி துக்டா' ரெடி!'
கருத்துகள்
கருத்துரையிடுக