சுந்தா
தேவையானவை: புளிப்பான மாங்காய்கள் - 4, சர்க்கரை
1 கப், சோம்பு, வெந்தயம், கடுகு - தலா 2 ஸ்பூன், கரகரப்பாக அரைத்த மிளகாய்த்தூள் - 1 கப், உப்பு - தேவைக்கு.
செய்முறை: மாங்காயின் தோலை நீக்கி, துருவவும். வெறும்
கடாயில் வெந்தயம், கடுகு, சோம்பை வறுத்து, கரகரப்பாகப் பொடிக்கவும். அகலமான பாத்திரத்தில், மாங்காய்த்துருவல், உப்பு, சர்க்கரை, பொடித்த வெந்தயக் கலவை, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர் அதை மெல்லிய துணியால் மூடி, வெயிலில் 5 நாட்கள் வைத்து எடுக்கவும். சர்க்கரை கரைந்து, மற்றவற்றுடன் கலந்து 'ஜாம்' பதத்தில் மாறியிருக்கும்.
குறிப்பு: இதைக் கெட்டியான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி வைத்தால், ஒரு வருடம் வரை கெடாமலிருக்கும்!
ஆம் கா பப்பட்
தேவையானவை:
நன்றாக பழுத்த மாம்பழக்கூழ் - அரை கப், நெய், ஏலக்காய்த்தூள் 2 கால் -கப், சர்க்கரை ஸ்பூன், உப்பு -சிட்டிகை.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் மாம்பழக்கூழ்,
சர்க்கரை, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கலவை இறுகி வரும்போது, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, மெல்லிய துணியால் மூடி, நான்கு நாட்கள் வெயிலில் வைத்திருந்து எடுக்கவும். தேவையான அளவில் துண்டு போடவும்.
குறிப்பு: இதைக் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்தால், வருடம் முழுக்க வைத்திருந்து உபயோகிக்கலாம்!
லௌக்கி டேப்லா
தேவையானவை: கோதுமை மாவு, சோளமாவு - தலா 1 கப்,
துருவிய சுரைக்காய் - 1 கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் தலா அரை ஸ்பூன், ஓமம், கரம் மசாலா, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா 1 ஸ்பூன், கொத்தமல்லித்தழை - கால் கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: சுரைக்காய்த்துருவலுடன் உப்பு சேர்த்து மூடி வைக்கவும். மாவு வகைகள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ஓமம், கரம் மசாலா, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக பிசையவும். பின்னர் கனமான ரொட்டிகளாக கைகளால் தட்டி, சூடான தடாவில் போட்டு, எண்ணெய் விட்டு, வேகவைத்து எடுக்கவும். லௌக்கி டேப்லா ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக