தேவையானவை: துவரம் பருப்பு - 1 கப், மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள் - தலா கால் ஸ்பூன், துருவிய வெல்லம் 2 ஸ்பூன், பச்சைமிளகாய், பூண்டு - தலா 3, தக்காளி - 1, எண்ணெய் - 2 ஸ்பூன், சீரகம், கோடா மசாலா, மிளகாய்த்தூள், கடுகு தலா 1 ஸ்பூன், கொத்தமல்லித்தழை - கால் கப், கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள், குடம்புளி - 3 இதழ்கள்.
செய்முறை: துவரம் பருப்புடன், மஞ்சள்தூள், தேவையான
தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். உரித்த பூண்டுப் பற்கள், பச்சைமிளகாயை உரலில் இடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இடித்த பூண்டு, துருவிய வெல்லம், தேவையான அளவு உப்பு, கரமசாலா, மிளகாய்த்தூள், வெந்த பருப்பு சேர்க்கவும். பின்னர் தண்ணீரில் புளியை கரைத்து (சற்றே’ நீர்க்க இருக்க வேண்டும்) ஊற்றி, கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கி, பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக