க்ரிஸ்பி பட்டாணி வடை
தேவையானவை: காய்ந்த பட்டாணி - 1 கப், பெரிய
வெங்காயம் (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் தலா 1, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, துருவிய இஞ்சி, சோம்பு தலா 1 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா 3/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை 2 கொத்து, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: பட்டாணியை குறைந்தது 8 மணி நேரம் ஊறவைத்து,
கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். எண்ணெய் தவிர மற்ற பொருள்களை சேர்த்து, நன்றாகக் கலந்து, வடையாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
முந்திரி ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை: பால் 1 லிட்டர், கடலைப்பருப்பு,
ஜவ்வரிசி, முந்திரி - தலா கால் கப், நெய் 5 ஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - 2 சிட்டிகை, துருவிய வெல்லம் கப், குங்குமப்பூ - அலங்கரிக்க. அரை
செய்முறை: கடலைப்பருப்பு, ஜவ்வரிசியை குக்கரில்
வேகவைக்கவும் (அதிகம் குழையக்கூடாது). அடி கனமான கடாயில் நெய் சேர்த்து, முந்திரியை (உடைக்காமல் முழுதாக போட்டு) சிவக்க வறுக்கவும். இதனுடன், வெந்த கடலைப்பருப்பு-ஜவ்வரிசிக் கலவையை சேர்க்கவும். இடையிடையே பால் சேர்க்கவும். கலவை குழம்புப் பதத்துக்கு வரும்போது வெல்லம், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, கொதித்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
குறிப்பு: இது பாயசம் போலில்லாமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் பதத்தில் இருக்கும். உணவுக்குப் பிறகு 'டெஸர்ட்' போல பரிமாறப்படுகிறது.
பீஸ் வெஜ் பால்
பூரணம் செய்ய: பொடியாக நறுக்கிய பீன்ஸ், துருவிய கேரட், வேகவைத்து சற்றே மசித்த பச்சைப் பச் பட்டாணி, துருவிய தேங்காய் - தலா 1 கப், பச்சைமிளகாய் 1/4 2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், கடுகு, மஞ் சள்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
மேல் மாவுக்கு: கொழுக்கட்டை மாவு 1 கப், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன், தண்ணீர் - தேவைக்கு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, நறுக்கிய
ப.மிளகாயை தாளித்து, நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, மஞ்சள்தூள் போட்டு வதக்கி, உப்பு தூவி கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். பின்னர் துரு துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்து ஆறவிடவும். கொழுக்கட்டை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். கைகளில் எண்ணெய்த் தடவி, மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி, லேசாக தட்டி, நடுவில் காய்கறி கலவையை சிறிதளவு வைத்து மூடி, உருண்டை பிடித்து, இட்லித் தட்டில் பரப்பி, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக