சன்னா ஜிலேபி
தேவையானவை: மைதா, துருவிய பனீர் - தலா 1 கப், உப்பு - சிட்டிகை, ஆப்ப சோடா - கால் ஸ்பூன், சர்க்கரை - 1 கப் + கால் கப், ஃபுட் கலர் (லெமன் நிறம்) - சிட்டிகை, பால் - 1 லிட்டர், பாதாம் - 10, நெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: மைதா, துருவிய பனீர், உப்பு, தேவையான அளவு தண்ணீர்
கலந்து கெட்டியாகப் பிசைந்து, ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக எடுத்து, நீள வடிவில் செய்து மடித்து, வட்டமாக வளையல் போல செய்து, சூடான நெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு கப் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர், ஃபுட் கலர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 1 கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். இந்தப் பாகில், பொரித்த ஜிலேபிகளை முக்கி எடுத்து, தட்டு அடுக்கவும். பாலை ஒரு கப் அளவு கண்டக் காய்ச்சி, ஊறவைத்து அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்து கலந்து, ஜிலேபிகளின் மேலே ஊற்றி பரிமாறவும்.
ஃப்ரெய்டு மில்க்
தேவையானவை: பால் - 1 லிட்டர், கன்டென்ஸ்டு மில்க், மைதா - தலா அரை கப், கஸ்டர்ட் பவுடர், சோளமாவு - தலா 4 ஸ்பூன், ஈஸ்ட், பேக்கிங் பவுடர் - தலா 1 ஸ்பூன், தேன் - 4 கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் பாலை தனியாக எடுத்து வைக்கவும். வெளியே பாலுடன் கன்டென்ஸ்டு மில்க், மைதா, தலா 2 ஸ்பூன் சோளமாவு, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைக்கவும். கலவை நன்றாக கெட்டியானதும், ட்ரெயில் கொட்டி, ஃப்ரீஸரில் 5 மணிநேரம் வைத்திருந்து எடுத்து, துண்டுகள் போடவும். அடுப்பில் எண்ணெய் காயவைத்து, மிதமான சூட்டில் வைக்கவும். வெளியே 2 ஸ்பூன் சோளமாவு, கஸ்டர்ட் பவுடர், பேக்கிங் சோடா, ஈஸ்ட், 1 கப் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையில் பால் துண்டுகளை முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மேலே தேன் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு:
இந்த டிஷ், ஸ்பெயின் நாட்டு ஸ்பெஷல்!
டர்கிஷ் லோகம்
தேவையானவை: மாதுளை முத்துக்கள் - 3 கப், சோளமாவு, வெண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு சிட்டிகை, நெய்யில் வறுத்த பிஸ்தா அரை கப், சர்க்கரை - 1 கப், மெலிதாக துருவிய மாதுளைத்தோல் - 1 ஸ்பூன், பொடித்த சர்க்கரை - கால் கப். செய்முறை: மாதுளை முத்துக்களை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் -
சோளமாவு சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். ட்ரேயில் வெண்ணெய்த் தடவி வைக்கவும். சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, மாதுளைத்தோல் துருவலை சேர்க்கவும். 2 கம்பிப் பாகு பதம் வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். மாதுளம்பழக் கலவையை கிளறி, கெட்டியாகி வரும்போது, கொதித்த சர்க்கரை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். முழுவதுமாக கலந்ததும், பிஸ்தா சேர்த்து கலந்து, வெண்ணெய்த் தடவிய தட்டில் கொட்டி, சமமான துண்டுகளாக்கவும். இவற்றை பொடித்த சர்க்கரையில் போட்டு, எல்லா பக்கமும் சர்க்கரை நன்றாக ஒட்டியதும், தட்டில் அடுக்கி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக