கேரட்- கேப்ஸிகம் சாம்பார்&குயிக் குழிப்பணியாரம்.&கேரட் ஃப்ரை&கேரட் - பீநட் ஸ்பைசி கறி&கேரட் - ஜிஞ்சர் ஜூஸ்
கேரட்- கேப்ஸிகம் சாம்பார்
தேவையானவை: கேரட் - 2 (வட்டமாக நறுக்கவும்), குடைமிளகாய் - 1 (சதுரமாக நறுக்கவும்). உரித்த சின்ன வெங்காயம் 15. कुबंडानी - 1, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, வேகவைத்து மசித்த துவரம் பருப்பு -ஒன்றரை கப், சாம்பார்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், புளித்தண்ணீர், உப்பு - தேவைக்கு."
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வெங்காயம், நறுக்கிய தக்காளி, கேரட், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி, உப்பு, சாம்பார்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும், காய்கள் நன்றாக வெந்ததும், பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சாம்பார் கலவை சேர்ந்து வரும்போது, நறுக்கிய கொத்துமல்லித் தூவி இறக்கவும்.'
குயிக் குழிப்பணியாரம்.
தேவையானவை: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா 1/2 கப், இட்லி மாவு - 1 கப், பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு - தலா 1/4 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு,
கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், சிறிய கரண்டியால் மாவை எடுத்து ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி / சாம்பாருடன் பரிமாறவும்.
கேரட் ஃப்ரை
தேவையானவை: வட்டமாக நறுக்கிய கேரட் - 1
கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மாங்காய்த்தூள், கடுகு - தலா 1/4 டீஸ்பூன், சாம்பார்தூள், மிளகாய்த்தூள் தலா 3/4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை :கேரட்டுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மாங்காய்த்தூள், சாம்பார்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, மசாலா கலந்து வைத்துள்ள கேரட்டை போட்டு நன்றாகப் புரட்டி, கடாயை மூடவும். சிறிது நேரம் கழித்து திறந்து மீண்டும் புரட்டி விடவும்.' நன்றாக ஃப்ரை ஆனதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
குறிப்பு: சாம்பார் சாதம் / தயிர் சாதம் / எலுமிச்சை சாதத்துடன் பரிமாறலாம்.
கேரட் - பீநட் ஸ்பைசி கறி
தேவையானவை: சதுரமாக நறுக்கிய கேரட்
1 கப், தேங்காய்த்துருவல் 2 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, தோல் நீக்கிய நிலக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் கேரட், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மற்றொரு கடாயில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, நிலக்கடலை, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் • போட்டு பொடிக்கவும். கேரட் வெந்ததும், 'இந்தப் பொடியை சேர்த்துக் கிளறவும். பின்னர் தேங்காய்த்துருவல் சேர்த்து புரட்டி இறக்கவும்.
கேரட் - ஜிஞ்சர் ஜூஸ்
தேவையானவை: கேரட்
2, இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு, தேன் தலா 2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், ஐஸ் கட்டி - 1, சர்க்கரை - தேவைக்கு.
செய்முறை: கேரட்டைக் கழுவி, தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போடவும். அதனுடன் தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, உப்பு, சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டவும். பின்னர் அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக