கேரட் ஸ்பைசி ரைத்தா &புரோட்டீன் ரிச் சாலட்& கேரட்- கொத்துமல்லி சூப்&கேரட் - பீஸ் பால்ஸ்&கேரட் க்ரன்சி ஃப்ரை
கேரட் ஸ்பைசி ரைத்தா
தேவையானவை: கேரட் துருவல், பொடியாக
நறுக்கிய வெங்காயம் தலா 1/4 கப், நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, குளிர வைக்கப்பட்ட கெட்டித் தயிர் 1 கப், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் டீஸ்பூன், காரா பூந்தி - சிறிதளவு, உப்பு - தேவைக்கு.
செய்முறை: காரா பூந்தி தவிர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் காரா பூந்தி சேர்த்துக் கலந்து, உடனே பரிமாறவும்.
புரோட்டீன் ரிச் சாலட்
தேவையானவை: கேரட் துருவல்
1/2 கப், அரைப்பதமாக வேகவைத்த பாசிப்பருப்பு 1/4 கப், நீளமாக நறுக்கிய சிறிய பச்சைமிளகாய் 3, எலுமிச்சைச்சாறு - ஒன்றரை டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து வைக்கவும். பின்னர் 30 நிமிட கழித்துப் பரிமாறவும்.
குறிப்பு:
புரதச்சத்து அதிகளவில் நிறைந்துள்ள சாலட் இது!
கேரட்- கொத்துமல்லி சூப்
தேவையானவை: கேரட், தக்காளி
தலா 4, 2, வெங்காயம் 1, பூண்டு பற்கள் கொத்துமல்லித்தழை - சிறிதளவு, பிரிஞ்சி இலை - 2, சீரகம் - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், மிளகு 1/2 டீஸ்பூன், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து,
வெண்ணெய்யை உருக்கி, சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கேரட் வெந்ததும் இறக்கி, நன்றாக ஆறவிடவும். பின்னர் கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாக அரை த்து, லேசாக சூடுபடுத்தி, மிளகுத்தூள் தூவி, நெய்யில் வறுத்த பிரெட்டுடன் பரிமாறவும் .
கேரட் - பீஸ் பால்ஸ்
தேவையானவை: கேரட் துருவல், பொடியாக
நறுக்கிய வெங்காயம் - தலா 1/2 கப், இஞ்சித்துருவல் 1/2 டீஸ்பூன், ஊறவைத்த பட்டாணி 1 ذه கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சோம்பு 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் உப்பு, எண்ணெய் - தேவைக்கு. 1/4 पुणे,
செய்முறை: தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, பட்டாணியை நன்றாக அரைத்துக்கொள்ளவும். மேலே கொடுத்துள்ள மற்ற பொருள்களைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்துள்ள கேரட் பட்டாணிக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெய்யில் போடவும். பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கேரட் க்ரன்சி ஃப்ரை
தேவையானவை: நீளமாக சற்று தடிமனாக
நறுக்கிய கேரட் - 2 கப், இஞ்சி-பூண்டு விழுது 1/2 டீஸ்பூன், தயிர் - ஒன்றரை டேபிள் ஸ்பூன், கார்ன் ஃப்ளோர் - 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா 3/4 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மாங்காய்த்தூள், சாட் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய்
தேவைக்கு.
செய்முறை: சாட் மசாலா தவிர்த்து மற்ற பொருள்களை கேரட் துண்டுகளுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கேரட்டை கலவையை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் சாட் மசாலாவை மேலே தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக