ஸ்பைசி பனீர் மின்ட் பகோரா
200 பனீர் கப், - 3/4 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மாங்காய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன், கசூரி மேத்தி - சிறிதளவு, உப்பு - தேவைக்கு.
தேவையானவை: பெரிய துண்டுகளாக நறுக்கிய பனீர்
எண்ணெய் - பொரிக்க. பனீரின் நடுவில் வைக்க: கெட்டியாக அரைத்த புதினா
சட்னி - சிறிதளவு. மேல் மாவுக்கு: கடலை மாவு - 3/4 கப், அரிசி மாவு - 1/4 இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள்
செய்முறை: பனீரை சற்று கனமான சதுரமாக நறுக்கி,
நடுவில் வெட்டி, புதினா சட்னியை வைக்கவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும், தோசை மாவுப் பதத்தில் கரைத்து, பனீரைத் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
பனீர் லாலிபாப்
தேவையானவை: துருவிய பனீர் - 100 கிராம், ஸ்வீட் பிரெட் துண்டுகள்
6,கார்ன் ஃப்ளோர் 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1.5 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், ஐஸ்க்ரீம் குச்சிகள் - தேவைக்கு.
செய்முறை : பிரெட்டை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.
அதனுடன், மேற்காணும் மற்ற பொருள்களைச் சேர்த்து, நன்றாகக் கலந்து, தண்ணீர் சிறிதளவு சேர்த்து, பூரி மாவுப் பதத்தில் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். பின்னர் அதை 'உருளை' வடிவில் உருட்டி, ஐஸ்க்ரீம் குச்சியில் வைத்து, நன்றாக அழுத்தி விடவும். பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, லாலிபாப்களை வரிசையாக வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பின்னர் அவற்றை எல்லாப் பக்கமும்பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
தவா ஃப்ரைடு மின்ட் பனீர்
தேவையானவை: சதுரமாக நறுக்கிய பனீர் - 100 கிராம், புதினா - கைப்பிடி
அளவு, பச்சை மிளகாய் - 1, பூண்டுப் பற்கள் - 2, இஞ்சி - சிறிதளவு, கெட்டித் தயிர் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 3/4 டீஸ்பூன், நெய் - சிறிதளவு, உப்பு -தேவைக்கு.
செய்முறை: புதினா, பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், கரம்
மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, பனீருடன் சேர்க்கவும். பின்னர் தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து, நன்றாகப் புரட்டி, 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி, நெய் ஊற்றி, புரட்டிய பனீரைப் போட்டு இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக