முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

கேரட் - பீஸ் குருமா &கேரட் - ஆனியன் ஸ்பைசி சட்னி &கேரட் - பெப்பரி மக்ரோனி &கேப்ஸிகம் ரைஸ்,&கேரட் - மக்ரோனி பாயசம்

 கேரட் - பீஸ் குருமா தேவையானவை: சிறிய சதுரங்களாக நறுக்கிய கேரட் - 1 கப், காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப் (ஊறவைத்து வேகவைக்கவும்), நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், தக்காளி - 2, பச்சைமிளகாய் - 1, தேங்காய்த்துருவல் - 1/4 கப், இஞ்சி-பூண்டு விழுது 3/4 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி - சிறிதளவு, சாம்பார்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சோம்பு - 1/4 டீஸ்பூன், முழு முந்திரி - 4, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கு. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் கேரட், நறுக்கிய தக்காளி மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்த்துருவல், முந்திரி, மிளகாய், சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து, 1 கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் ஊற்றவும். நன்றாக சேர்ந்து வரும்போது, கரம் மசாலா சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி தூ...

ஸ்பைசி பனீர் மின்ட் பகோரா & பனீர் லாலிபாப் & தவா ஃப்ரைடு மின்ட் பனீர்

 ஸ்பைசி பனீர் மின்ட் பகோரா 200 பனீர் கப், - 3/4 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மாங்காய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன், கசூரி மேத்தி - சிறிதளவு, உப்பு - தேவைக்கு. தேவையானவை: பெரிய துண்டுகளாக நறுக்கிய பனீர் எண்ணெய் - பொரிக்க. பனீரின் நடுவில் வைக்க: கெட்டியாக அரைத்த புதினா சட்னி - சிறிதளவு. மேல் மாவுக்கு: கடலை மாவு - 3/4 கப், அரிசி மாவு - 1/4 இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் செய்முறை: பனீரை சற்று கனமான சதுரமாக நறுக்கி, நடுவில் வெட்டி, புதினா சட்னியை வைக்கவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும், தோசை மாவுப் பதத்தில் கரைத்து, பனீரைத் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.  பனீர் லாலிபாப் தேவையானவை: துருவிய பனீர் - 100 கிராம், ஸ்வீட் பிரெட் துண்டுகள் 6,கார்ன் ஃப்ளோர் 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1.5 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், ஐஸ்க்ரீம் குச்சிகள் -...