வீட்டிலேயே பனீர் தயாரிப்பது எப்படி?
தேவையானவை: பால் - 1 லிட்டர், எலுமிச்சைச்சாறு - 1
ஸ்பூன், குளிர்ந்த நீர் - சிறிதளவு.
செய்முறை பாலை அடுப்பில் வைத்து, அது நன்கு கொதி வரும்போது எலுமிச்சைச்சாறு சேர்த்து, கரண்டியால் நன்றாகக் கலந்து விடவும். பால் முழுமையாகத் திரிந்து வந்தவுடன், அடுப்பை அணைக்க சற்று பெரிய வடிகட்டியில், சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டு திரிந்த பாலை அதில் ஊற்றவும். துண்ணீர் நன்றாக வடிந்தவுடன், அதில் குளிர்ந்த நீரை சிறிதளவு ஊற்றி, ஒரு ஸ்பூனால் நன்றாகக் கிளரி விடவும். ஊற்றிய தண்ணீர் வடிந்தவுடன், துணியை அப்படியே இறுக்கி உள்ள நீரை சுத்தமாக வடித்துவிடவும். பிறகு அதனை அப்படியே மூட்டை போல கட்டவும். சற்று கனமான தோசைக்கல் அல்லது ஏதேனும் கனமான பொருளை அதன்மீது வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து எடுத்து, விருப்பமான அளவில் பனீரை நறுக்கிப் பயன்படுத்தவும்.
பனீர் கட்லெட்
தேவையானவை: துருவிய பனீர் - 100 கிராம், வேகவைத்து தோலுரித்த
உருளைக்கிழங்கு - 2, பிரெட் க்ரம்ஸ் - 1/4 கப், கார்ன் ஃப்ளோர் - 1 டேபிள் ஸ்பூன், துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை -சிறிதளவு காய்ந்த திராட்சை - 10, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் கரம் மசாலாத்தூள் - தலா 3/4 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.
செய்முறை: மேலே சொல்லப்பட்டுள்ள பொருள்கள்
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, லேசாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
பனீர் கீர்
தேவையானவை: துருவிய பனீர் - 1/2 கப், பால் - 1 லிட்டர், ஏலக்காய் -3 (பொடிக்கவும்), பிஸ்தா - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு, நெய் -2 டீஸ்பூன், சர்க்கரை - தேவைக்கு.
செய்முறை: பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, மிதமான தீயில் வைத்து, ஒரு
லிட்டர் பால் அரை லிட்டராகும் வரை கண்டக் காய்ச்சவும், பின்னர் சர்க்கரை சோத்து கைவிடாமல் நன்றாகக் கிளறவும். சர்க்கரை கரைந்தவுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பனீர் துருவல், குங்குமப்பூ, பிஸ்தா சேர்த்து நன்றாகக் கிளறி, நெய் ஊற்றி, அடுப்பை அணைத்து, பாத்திரத்தை இறக்கவும். ஆறியதும், ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, ஜில்லென்று பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக