அவகாடோ பாஸ்தா
தேவையானவை: கோதுமை பாஸ்தா, நறுக்கிய பசலைக்கீரை தலா 1 கப், ஆலிவ் எண்ணெய், மிளகுத்தூள் - தலா 2 ஸ்பூன், பழுத்த அவகாடோ 2, நறுக்கிய கொத்துமல்லித்தழை - 1/2 கப், பூண்டு பற்கள் - 4, உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: பாஸ்தாவுடன் 2 கப் தண்ணீர், உப்பு, % ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். பின்னர் நீரை வடித்து, குளிர்ந்த நீரில் அலசவும். அவகாடோவை நறுக்கி மிக்ஸியில் போடவும். இதனுடன் பசலைக்கீரை, கொத்துமல்லித்தழை, பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து விழுதாக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து கிளறி, வெந்த பாஸ்தாவை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
லேயர் பாஸ்தா
தேவையானவை: அளவில் சிறியதாக இருக்கும் பாஸ்தா - 2 கப், புதினா, தயி - 16 கப், வெள்ளை மிளகுத்தூள் - 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சர்க்கரை % ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய் தலா 2, ஆலிவ் எண்ணெய், சீஸ் துருவல் - தலா 2 ஸ்பூன், ஆரிகானோ - 1 1/2 ஸ்பூன், வெண்ணெய். உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: பாஸ்தாவை வேகவைத்து நீரை வடித்து, வெந்ததை மூன்று சம பாகங்களாக பிரிக்கவும். 1) புதினா, பச்சைமிளகாய், 1/2 ஸ்பூன் ஆரிகானோ, இஞ்சி, சர்க்கரை சேர்த்து விழுதாக்கி, 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் வதக்கி, ஒரு பங்கு பாஸ்தா சேர்த்து கலக்கவும். 2) தயிருடன், உப்பு, மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் ஆரிகானோ சேர்த்து, வெந்த ஒரு பங்கு பாஸ்தாவுடன் கலக்கவும். 3) தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு, 1/2 ஸ்பூன் ஆரிகானோ சேர்த்து அரைத்து, 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் வதக்கி, வெந்த பாஸ்தாவுடன் கலக்கவும். ஒரு டிரேயில் வெண்ணெய்த் தடவி, 3 வித பாஸ்தாக்களையும் பரப்பி, சீஸ் துருவலை மேலாக தூவி பரிமாறவும்.
பிரின்ஜால் பாஸ்தா
தேவையானவை: வெந்த பாஸ்தா - 1 கப், பெரிய சைஸ் கத்திரிக்காய், சிறிய சைஸ் கத்திரிக்காய் - தலா 1, வெண்ணெய் - 1 ஸ்பூன், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் தலா 2 ஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 1/4 கப், உப்பு ருசிக்கேற்ப.
செய்முறை: சிறிய கத்திரிக்காயை மிகப்பொடியாக நறுக்கி, வெண்ணெயில் பொரித்து எடுக்கவும். பெரிய கத்திரிக்காயை அடுப்பில் நேரடித் தணலில் சுட்டு எடுத்து, ஆறியதும் தோலை உரித்து, கைகளால் மசிக்கவும். இதனுடன், உப்பு, டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், மசித்த கத்திரிக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் வெந்த பாஸ்தாவைச் சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
குறிப்பு: கத்திரிக்காய் சுட்ட வாசனைப் பிடிக்காவிட்டால், கத்திரிக்காயை குக்கரில் வேகவைத்து, தோலுரித்து மசித்து சேர்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக