முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

பாசிப்பருப்பு கட்லட்&கொண்டைக்கடலை கட்லட்

 பாசிப்பருப்பு கட்லட்


தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், உருளைக்கிழங்கு


100 கிராம், தேங்காய்த்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி -தலா சிறிதளவு, வெங்காயம் ஒன்று, கேரட் துருவல் (அ) முட்டைக்கோஸ் துருவல் - அரை கப், உப்பு, ரொட்டித்தூள் - தேவையான அளவு.


தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தலா சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் கேரட் துருவலை வதக்கி, உப்பு, கொத்துமல்லித்தழை, அரைத்த பாசிப்பருப்பு விழுது, மசித்த உருளை சேர்த்து கிளறி இறக்கி, ஆறியதும் வட்டமாக தட்டி, ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து, சூடான தவாவில் போடவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.


கொண்டைக்கடலை கட்லட்


தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு - தலா 100 கிராம், இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன், கரம் மாசலா, சாட் மசாலா, மிளகாய்த்தூள் - தலா அரை ஸ்பூன், ஆம்சூர் பவுடர் ஒரு ஸ்பூன், மைதா மாவு - உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனுடன் கரம் மசாலா, சாட் மசாலா, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், மைதா மாவு, மசித்த உருளை சேர்த்து, நன்றாகப் பிசையவும். பின்னர் அதை வடை போல தட்டி, காய்ந்த தவாவில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.

Algae Cutlet


 Ingredients: Lentils - half a cup, potatoes


 100 gms, coconut flakes one table spoon, coriander leaves, chopped green chillies, chopped ginger - a little bit each, onion one, grated carrot (a) Cabbage grated - half a cup, salt, breadcrumbs - as required.


 Seasoning: Mustard, urad dal, curry leaves - little each, oil - as required.


 Method: Soak the dal and grind it with coconut flakes.  Boil the potatoes, peel them and mash them.  Leave 2 spoons of oil in a pan, season with mustard, urad dal, curry leaves, add chopped onions, green chillies and chopped ginger and saute.  Then saute the grated carrot, add salt, coriander leaves, ground dal paste, mashed dal and stir it. After it cools down, pat it into a circle, roll it in breadcrumbs and put it in a hot tawa.  Pour oil all around, flip both sides and remove when cooked.


 Chickpea cutlets


 Ingredients: White Chickpea, Potato - 100g each, Ginger Garlic Paste - one spoon, Garam Masala, Chaat Masala, Chilli Powder - half a spoon each, Amsoor Powder - one spoon, Maida Flour - Salt, Oil - as required.


 Method: Boil potatoes, peel and mash.  Soak the chickpeas overnight on the first day, boil them the next day and grind them with salt.  To this add garam masala, chaat masala, chilli powder, amsoor powder, maida flour, masidda urulai and knead well.  Then pat it like a vada, put it in a dry tawa, leave oil all around and bake it.

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...