கத்தரிக்காய் புலாவ்
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
தக்காளி புலாவ்
தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை மட்டும் 15 நிமிடம் ஊற விடவும். எண்ணெயில் முழு சின்ன வெங்காயத்தை வதக்கவும்.அதனுடன் தக்காளியையும் வதக்கி, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை,இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பும் சேர்த்து,அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஊற வைத்த அரிசியையும் சேர்த்து அதனுடன் 33/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 'பிரஷர் குக்கரில் வேக விடவும். வெந்ததும் பரிமாறுவதற்கு முன்பு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
ஜீரா புலாவ்
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் 2, இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், குங்குமப்பூ-2 சிட்டிகை, நெய்-50 கிராம், பாஸ்மதி அரிசி-/கிலோ, உப்பு- தேவையான அளவு.
செய்முறை: பாஸ்மதி அரிசியில் சாதம் வடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். கலவை நன்கு சுருண்டு வந்ததும் இறக்கி, அதனுடன் சாதத்தைக் கலக்கவும். குங்குமப்பூவை சுடு தண்ணீரில் கலந்து அதை சாதத்தின் மேல் தெளித்துக் கிளறவும். விருப்பப்பட்டால் கரம்மசாலா பவுடர், வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறலாம்.
காஷ்மீரி புலாவ்
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி 1/2 கிலோ,
பொடியாக நறுக்கிய பைன் ஆப்பிள், திராட்சை - மொத்தமாக 100 கி, முந்திரி, உலர்திராட்சை - 50 கி, பொடியாக நறுக்கிய கேரட் 2, பொடியாக நறுக்கிய கோஸ் 100 கி, பெரிய - வெங்காயம் (நறுக்கியது) 2, மிளகுத்தூள் 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, அஜினமோட்டோ 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், கோஸ் எல்லாவற்றையும் நன்கு வதக்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்துக் கிளறவும். இதை செய்து வைத்த சாதத்தில் கலந்து, நறுக்கி வைத்த பழங்களையும் கலக்கவும். வறுத்து வைத்த முந்திரி, திராட்சையால் சாதத்தை அலங்கரிக்கவும்.Veg
Eggplant Pulao
Ingredients: Eggplant - 1/4 kg, Bark,Cinnamon 2 each, whole pepper - 2 tbsp, coconut / cover, green chillies - 4, oil - 2 tbsp, mustard, curry leaves - for seasoning, basmati rice 1/4 kg, salt - as required.
Method: Drain basmati rice into rice. Saute mustard green chillies, green chillies and coconut in oil and grind them well. Saute the onion in oil, add the ground paste and then add the chopped eggplant and saute. Add required amount of salt to this and add 1/2 cup of water and let it boil. When the mixture boils well, drain and serve with rice.
Tomato Pulau
Ingredients: Tomato-5, Onion-200 kg, Turmeric powder- 1/4 tsp, Chilli powder- 1/2 tsp, Bark, Cinnamon-2 each, Ginger garlic paste-2 tsp, Brinjhi leaf-little, Lemon- half a lid , basmati rice-21% cup, oil-3 table spoon, salt-required quantity.
Method: Remove the rice and drain the water and let the rice alone soak for 15 minutes. Saute whole small onion in oil. Saute tomatoes along with it, add bark, cinnamon, brinjal leaves, ginger garlic paste, turmeric powder, chilli powder, salt, add some water and let it boil. Add the soaked rice to this and add 33/4 tumbler of water to it and cook it in a pressure cooker. Once cooked, add lemon juice before serving.
Jeera pulao
required things:
Onion 2, ginger garlic paste 1 tsp, cumin-1 tsp, saffron-2 pinch, ghee-50 gm, basmati rice-/kg, salt- as required.
Recipe: Boil rice in basmati rice
please Pour ghee in a pan, season with cumin, add chopped onion, salt, ginger and garlic paste and saute. When the mixture becomes well-curled, take it out and mix the rice with it. Mix saffron with hot water and sprinkle it over the rice and stir. Serve with garamsala powder and roasted cashews if desired.
Kashmiri Pulau
Ingredients: Basmati rice 1/2 kg,
Finely Chopped Pine Apples, Raisins - Total 100kg, Cashews, Raisins - 50kg, Finely Chopped Carrots 2, Finely Chopped Goose 100kg, Big - Onions (chopped) 2, Peppers 1tbsp, Green Chillies - 2, Ajinamoto 1tbsp, Ghee - 1 Tablespoon, Salt - as required.
Method: Drain basmati rice into rice. Fry cashews and raisins in ghee. In the same ghee, saute onions, green chillies, carrots and cabbage well. Then add salt, pepper and ajinamoto and stir. Mix this in the prepared rice and mix the chopped fruits. Garnish the rice with roasted cashews and raisins.
கருத்துகள்
கருத்துரையிடுக