மட்டன் மொஹலாய் பிரியாணி
தேவையான பொருட்கள்: மட்டன் - / கிலோ, பாஸ்மதி அரிசிய கிலோ, இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள்-1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (நறுக்கியது)-4, தக்காளி-3, பச்சைமிளகாய் 6, பட்டை, லவங்கம் - தலா 2, நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணொய் -3 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூன் - % டீஸ்பூன், மிளகாய்ப் பொடி-1டீஸ்பூன், தயிர் -1 கப், மல்லி இலை - சிறிதளவு, ஃபுட் கலர் - தேவைக்கேற்ப, கசகசா - ஒரு டீஸ்பூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மட்டனைக் கழுவி சுத்தம் செய்யவும் அரிசியை களைந்து தண்ணீரை இறுத்துவிட்டு 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு வதக்கவும் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் இதனுடன் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மட்டன் துண்டுகளையும் போட்டு வதக்கவும். மட்டன் துண்டுகள் வேக ஆரம்பிக்கும் போது லேசாக வெள்ளை நிறமாக மாற ஆரம்பிக்கும் அப்போது இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க
விடவும். கசகசாவை அரைத்து, தயிருடன் சேர்த்துக் கலக்கவும். இதை கொதிக்க வைத்த இந்த மட்டன் கலவையுடன் சேர்த்து அதனுடன் ஊற வைத்தஅரிசியையும் சேர்க்கவும் இதனுடன் 4 டம்ளர் தண்ணீர்சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். இறக்கி, மல்லி இழை தூவி ஃபுட் கவர் தெளித்துப் பரிமாறவும்.
முட்டைஇடியாப்ப பிரியாணி
தேவையான பொருட்கள்: இடியாப்பம் 10, முட்டை 1 - 5,பெரிய வெங்காயம் நறுக்கியது - 2 (அ) 3, தக்காளி (பெரியது) 1.பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை 1 கொத்து மல்லி, புதினா - தேவையான அளவு, தேங்காய் (துருவியது) - 1 கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் % டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, துருவிய தேங்காய், மிளகு சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும். இடியாப்பத்தை உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்த முட்டைக் கலவையை ஊற்றி நன்கு கிளற வேண்டும். உதிர் உதிராக வந்ததும் இடியாப்பத்தையும் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். மல்லி, புதினாவால் அலங்கரிக்கவும்.
ஆம்பூர் சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்: சீரகச் சம்பா அரிசி-% கி. சிக்கன்- கி, இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் (பெரிதாக நறுக்கியது) -% கி, பச்சைமிளகாய்-4, மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன், மல்லித்தூள்-% டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா 2, தேங்காய் (துருவியது)-4 கப், கசகசா ஒரு டீஸ்பூன் (தேங்காய், கசகசா இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்) நெய்-2 டேபிள் ஸ்பூன், எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு. -
செய்முறை: சீரகச் சம்பா அரிசியை நன்கு களைந்து, தண்ணீரை வடித்து விட்டு பதினைந்து நிமிடம் ஊற விடவும். நெய் + எண்ணெயை வாணலியில் ஊற்றி வெங்காயத்தை அதில் வதக்கவும் அதனுடன் பட்டை, லவங்கம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சுத்தம் செய்து வைத்த சிக்கன் சேர்த்துக் கொதிக்க விடவும் லேசாக ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதையும் சேர்த்துக் கொதிக்க விடவும். ஊற வைத்த சீரசு சம்பா அரிசியை இதனுடன் சேர்த்து 2/4 டம்ளர் தண்ணீரையும் சேர்த்து, பிரஷர் குக் செய்யவும்.ஆம்பூர் சிக்கன் பிரியாணி ரெடி .( Mutton Mohalai Biryani
Ingredients: Mutton - / kg, Basmati rice kg, Ginger, Garlic paste - 2 tbsp, Peppers-1 tbsp, Onion (chopped)-4, Tomato-3, Green chillies 6, Bark, Cinnamon - 2 each, Ghee - One Tablespoon, Ghee -3 Tablespoon, Turmeric - % Teaspoon, Chilli Powder -1 Teaspoon, Yogurt -1 Cup, Coriander Leaf - Little, Food Color - As Needed, Poppy Seed - One Teaspoon, Salt - As Needed.
Method: Wash and clean the mutton, remove the rice, turn off the water and soak for 15 minutes. Pour oil and ghee in a pan, add bark and cinnamon and fry chopped tomatoes, onions and green chillies, add ginger and garlic paste and fry the mutton pieces. When the mutton pieces start to cook they will start to turn slightly white then add salt, turmeric powder, pepper powder and chilli powder to it and boil it.
Let go. Grind poppy seeds and mix them with curd. Add this to the boiled mutton mixture and add the soaked rice along with 4 tumblers of water and cook in a pressure cooker till 3 whistles. Remove, sprinkling coriander leaves and sprinkling the food cover and serve.
Egg Idiappa Biryani
Ingredients: Idiyappam 10, Egg 1 - 5, Big onion chopped - 2 (a) 3, Tomato (big) 1. Green chillies - 1, Curry leaves 1 bunch coriander, Mint - as required, Coconut (grated) - 1 cup, Pepper, Cumin - 1 teaspoon each, Turmeric powder % teaspoon, Chilli powder 1/2 teaspoon, Oil - 2 spoons, Salt - as required.
Method: Break the egg and add onion, tomato, green chillies, curry leaves, turmeric powder, chilli powder, salt, grated coconut, pepper cumin powder and beat it well. Shed the Idiapam. Pour oil into the pan and pour the prepared egg mixture and stir well. When it comes to a boil, add the Idiyappa and stir for 5 minutes on low flame. Garnish with coriander and mint.
Ambur Chicken Biryani
Ingredients: Cumin Samba Rice-% Kg. Chicken- ki, Ginger garlic paste-2 tbsp, Onion (chopped big) -% ki, Green chillies-4, Chilli powder-1 tsp, Coriander powder-% tsp, Bark, Cinnamon-2 each, Coconut (grated)-4 cups , poppy seeds one teaspoon (grind both coconut and poppy seeds) ghee-2 table spoon, oil-2 table spoon, salt as needed. -
Method: Drain the cumin samba rice well, drain the water and let it soak for fifteen minutes. Pour ghee + oil in a pan and saute the onion in it and saute it along with bark, cinnamon and green chillies. When sauteed well, add ginger garlic paste, chilli powder, coriander powder, cleaned chicken and let it boil. When it boils slightly, add coconut paste and let it boil. Add 2/4 cup of water and pressure cook the soaked seersu samba rice. Ambur Chicken Biryani is ready.)
கருத்துகள்
கருத்துரையிடுக