இடியாப்ப கைமா தம் பிரியாணி
தேவையான பொருட்கள்: இடியாப்பம் -1/2கி,கைமா (மட்டன்) கி, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் (நீளவாக்கில் கீறியது)- 4. பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 1, கரம்மசாலா -/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி - சிறிதளவு, எலுமிச்சை பாதி மூடி, கறிவேப்பிலை - தாளிக்க,உப்பு- தேவையான அளவு. செய்முறை: இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும். எண்ணெயில் கரம் மசாலா பவுடர், வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கிளறி அதனுடன் கைமா கறியையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் வரை வேக விடவும். கலவை நன்கு கொதித்ததும், உதிர்த்த இடியாப்பத்தை இதனுடன் சேர்த்துக் கிளறி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, தக்காளி - % கிலோ, பெரிய வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) 150 கி, பச்சைமிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 3, தயிர் 2 கப், எண்ணெய் 50 மில்லி, நெய் 50 கிராம், மஞ்சள்தூள் 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலம் - சிறிதளவு, பிரிஞ்சி, மல்லி, புதினா இலைகள் - மொத்தமாக ஒரு கைப்பிடி, எலுமிச்சம்பழம் 1, உப்பு - தேவையான அளவு. செய்முறை: நெய்யில், கோழிக் கறியை வதக்கி எடுக்கவும். பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி, தண்ணீரை நீக்கிவிட்டு அரிசியை மட்டும் பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் கோழிக்கறியையும் சேர்த்து வதக்கி, மீதமிருக்கும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பிரிஞ்சி, மல்லி இலைகள் சேர்த்து வதக்கவும். கடைசியாக எலுமிச்சம்பழ சாற்றையும் சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வெயிட் போடவும். 2 விசில் வந்ததும் குக்கரை ஆஃப் செய்யவும். குக்கரில் ஆவி அடங்கியதும், திறந்து அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி கொதிக்கவிடவும். பிறகு தேவையான அளவு உப்புசேர்த்து, அதனுடன் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக விடவும். பிறகு குக்கரில் வெயிட் போட்டு, 4 விசில்கள் வந்ததும் இறக்கி விடவும். அப்படியே ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இந்த பிரியாணியை தம்மில் வைக்கவும். பரிமாறும்போது சிறிதளவு ரோஸ் எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
இறால் பிரியாணி
தேவையான பொருட்கன்: இறால் - / கி, பாஸ்மதி அரிசி - 1/2 கி, இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் (நீளவாக்கில் கீறியது) -2, பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 2, தக்காளி (நறுக்கியது) - 4, மஞ் சள்தூள் - % டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கரம்மசாலா - 1/2 டீஸ்பூன், மல்லி இலை - சிறிதளவு, எலுமிச்சை - பாதி மூடி, எண்ணெய், நெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியில் சாதம் வடிக்கவும். எண்ணெய், நெய்யில் கரம்மசாலா தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் மூன்றையும் வதக்கி, கரம்மசாலா, மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்ததும் சுத்தம் செய்து வைத்த இறாலை அதனுடன் சேர்த்து வேகவிடவும். மசாலா சுண்டியதும், இறக்கி பாஸ்மதி சாதத்தை இதனுடன் கலந்து எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாறவும்.(Idiappa Kaima Tam Biryani Ingredients: Idiappam -1/2 kg, Kaima (mutton) kg, Turmeric powder - 1/4 tbsp, Ginger, Garlic paste - 1 tbsp, Chilli powder - 1 tbsp, Green chillies (sliced lengthwise) - 4. Big onion - 3, tomato - 1, garam masala -/2 tbsp, oil - 2 table spoon, coriander - a little, lemon half cover, curry leaves - for seasoning, salt - required quantity. Method: Peel the ideyappam. Saute garam masala powder, onion, green chillies in oil well. Add ginger, garlic paste, turmeric powder, chilli powder and salt to this. Stir this mixture well and saute along with the khaima curry. Add a quart of water to this and cook in a pressure cooker for 3 whistles. Once the mixture boils well, stir in the drained idiappam, add lemon juice and sprinkle with coriander and serve. Chicken Biryani Ingredients: Basmati rice 2 cups, Chicken - 1/2 kg, Tomatoes - % kg, Onion (chopped lengthwise) 150 kg, Green chillies (chopped lengthwise) - 3, Yogurt 2 cups, Oil 50 ml, Ghee 50 gm , Turmeric powder 1 tsp, Chilli powder - 2 tsp, Bark, Cloves, Tender - little, Brinjhi, Coriander, Mint leaves - a handful in total, Lemon 1, Salt - as required. Method: Saute chicken curry in ghee. Wash the basmati rice well, remove the water and soak the rice alone for fifteen minutes. Pour oil in the cooker and when it is dry, add some onion and add curd, ginger garlic paste, long chopped green chillies, bark, cloves and cardamom. Saute the chicken along with this and add the remaining chopped onion, tomato, turmeric powder, chilli powder, brinjal and coriander leaves. Finally add lemon juice, pour half a cup of water and cover the cooker. Switch off the cooker after 2 whistles. Once the cooker is steaming, open it and add 3 tumblers of water to it. Bring to a boil. Then add the required amount of salt, add the soaked rice to it, cover the cooker and cook on medium flame for 15 minutes. Then put the weight in the cooker and drop it after 4 whistles. Keep this biryani in the tam for about five minutes. Add a little rose essence while serving. Prawn Biryani Ingredients: Prawn - / kg, Basmati Rice - 1/2 kg, Ginger Garlic Paste - 2 Tablespoon, Green Chilli (chopped lengthwise) -2, Onion (chopped) - 2, Tomato (chopped) - 4, Manj chaldoo - % tsp, Chili powder - 1 tsp, Garamsala - 1/2 tsp, Coriander leaves - little, Lemon - half a lid, Oil, Ghee - 1 tbsp, Salt - as required. Method: Drain rice in basmati rice. Saute the garamsala tomatoes, onions and green chillies in oil and ghee, add garamsala, coriander leaves, ginger garlic paste, salt, chilli powder and turmeric powder and add half a tumbler of water and boil. Once the mixture boils, add the cleaned prawns and boil. Once the masala is cooked, drain and mix basmati rice with it and serve with lemon juice.)
கருத்துகள்
கருத்துரையிடுக