முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...

மட்டன் மொஹலாய் பிரியாணி &முட்டைஇடியாப்ப பிரியாணி&ஆம்பூர் சிக்கன் பிரியாணி

 மட்டன் மொஹலாய் பிரியாணி தேவையான பொருட்கள்: மட்டன் - / கிலோ, பாஸ்மதி அரிசிய கிலோ, இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள்-1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (நறுக்கியது)-4, தக்காளி-3, பச்சைமிளகாய் 6, பட்டை, லவங்கம் - தலா 2, நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணொய் -3 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூன் - % டீஸ்பூன், மிளகாய்ப் பொடி-1டீஸ்பூன், தயிர் -1 கப், மல்லி இலை - சிறிதளவு, ஃபுட் கலர் - தேவைக்கேற்ப, கசகசா - ஒரு டீஸ்பூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மட்டனைக் கழுவி சுத்தம் செய்யவும் அரிசியை களைந்து தண்ணீரை இறுத்துவிட்டு 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு வதக்கவும் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் இதனுடன் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மட்டன் துண்டுகளையும் போட்டு வதக்கவும். மட்டன் துண்டுகள் வேக ஆரம்பிக்கும் போது லேசாக வெள்ளை நிறமாக மாற ஆரம்பிக்கும் அப்போது இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கசகசாவை அரைத்து, தயிருடன் சேர்த்துக் கலக்கவும். இதை கொதிக்க வைத்த இந்த மட்...

இடியாப்ப கைமா தம் பிரியாணி&சிக்கன் பிரியாணி&இறால் பிரியாணி

 இடியாப்ப கைமா தம் பிரியாணி  தேவையான பொருட்கள்: இடியாப்பம் -1/2கி,கைமா (மட்டன்) கி, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் (நீளவாக்கில் கீறியது)- 4. பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 1, கரம்மசாலா -/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி - சிறிதளவு, எலுமிச்சை பாதி மூடி, கறிவேப்பிலை - தாளிக்க,உப்பு- தேவையான அளவு. செய்முறை: இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும். எண்ணெயில் கரம் மசாலா பவுடர், வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கிளறி அதனுடன் கைமா கறியையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் வரை வேக விடவும். கலவை நன்கு கொதித்ததும், உதிர்த்த இடியாப்பத்தை இதனுடன் சேர்த்துக் கிளறி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.  சிக்கன் பிரியாணி  தேவையான பொருட்கள்:  பாஸ்மதி அரிசி 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, தக்காளி - % க...

காலிஃபிளவர் கலர்ஃபுல் பாஸ்தா &உளுந்து சட்னி&காலிஃபிளவர்-தேங்காய் அடை& காலிஃபிளவர் கார குழிப்பணியாரம்

 காலிஃபிளவர் கலர்ஃபுல் பாஸ்தா  தேவையானவை: உதிர்த்த காலிஃபிளவர் பூக்கள் - ஒரு கப், பாஸ்தா 3, இஞ்சி, பூண்டு விழுது அரை கப், நறுக்கிய மஞ்சள் நிற குடைமிளகாய், சதுரமாக நறுக்கிய பீட்ரூட் 2 டேபிள் ஸ்பூன், தக்காளி - ஒன்று, பச்சைமிளகாய் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் , ஆய்ந்த கொத்துமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன், பால், உப்பு எண்ணெய் - தேவையான அளவு.  செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய குடைமிளகாய், காலிஃபிளவர், பீட்ரூட் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, தேவையான அளவு பால் விட்டு ஒரு கொதி வந்ததும், நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும் .  உளுந்து சட்னி  தேவையானவை: கீரைக்கலவை - 2 கைப்பிடி, கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் மிளகு - 5, சின்ன வெங்காயம் - 15, நாட்டுத்தக்காளி - 2, - 3, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன், கல் உப...

மட்டன் கோலா பிரியாமணி  &  முட்டை பிரியாணி&  செட்டிநாடு ஃபிஷ் ஃபிரை&கோழி உலர்த்தியது&ஹைதராபாத் மட்டன் மசாலா

 மட்டன் கோலா பிரியாமணி  தேவையானவை பாசுமதி அரிசி-3 கப், லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு -2, புதினா- ஒரு கைப்பிடியளவு, கொத்து மல்லித்தழை -சிறிதளவு, பச்சை மிளகாய்-5, நெய்-2 டேபிள் ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு- தேவைக்கு. கோலா செய்ய: கொத்துக் கறி-ஒரு கிலோ, காய்ந்த மிளகாய்-6, வறுத்த கடலைப் பருப்பு-2 டீஸ்பூன், முந்திரி-5, வெந்தயம்-ஒரு டீஸ்பூன், சின்னவெங்காயம்-5, தேங்காய்த் துருவல்-2 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி-2 துண்டு, பட்டை-ஒன்று, கிராம்பு-2, கறிவேப்பிலை-ஒரு கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் முந்திரி, வெந்தயம், கடலைப்பருப்பு, நறுக்கிய இஞ்சி, தே.துருவல், சேர்த்து லேசாக வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். வறுத்த பொருட்கள் (மட்டனை தவிர) அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, பின்னர் வறுத்த மட்டன், உப...

தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி & சிக்கன் 65 பிரியாணி & இறால் பிரியாணி&மீன் பிரியாணி

 தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி தேவையானவை பாசுமதி அரிசி - 3 கப், சிக்கன் (துண்டுகளாக நறுக்கியது)-ஒரு கிலோ லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்து மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய்-2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை பாசுமதி அரிசியை நன்றாக கழுவி, அரைமணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன் னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்து மல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளி, சிவப்பு மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, முந்திரி விழுது, தேவை யான அளவு உப்பு சேர்த்து, சுண்ட விட...