தேங்காய் மிளகாய்ப் பொடி
தேவையானவை: தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு - தலா 1 கப், காய்ந்த மிளகாய் அரை கப், வெல்லம் - கொட்டைப் பாக்களவு, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தேங்காய்த்துருவல், பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் ஆகியவற் ைதவித்தனியாக வறுத்தெடுக்கவும். பின்னர் அவற்றை ஆறவைத்து அதனுடன் வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரவென அரைக்கவும்.
இந்த தேங்காய் மிளகாய்ப் பொடியை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
கத்தரிக்காய் சப்ஜி
தேவையானவை: கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி தலா 4, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், புளிக்கரைசல் தலா 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. 2,
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய கத்தரிக்காய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல்
சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறவைத்து நன்றாகவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, நாண் ஆகியகு ஏற்ற சைட்-டிஷ் இது!
சிவப்புமிளகாய் - தலா 1 கப், புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு (தாளிக்க), உளுந்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் " 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிவப்புமிளகாய், கடலைப்பருப்பை தனித்தனியாக வறுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். வறுத்த பொருட்களை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங்காயம், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பை போட்டு தாளிக்கவும். இதை அரைத்த விழுதுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்: இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற சைட்-டிஷ் இது!
கடப்பா
தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், வெங்காயம், தக்காளி, ஏலக்காய், பட்டை, கிராம்பு உருளைக்கிழங்கு - 2, பச்சைமிளகாய் - 4, இஞ்சி-பூண்டு தலா 1, விழுது, சோம்பு - தலா 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை 3 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குழைய வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இட்லி, தோசைக்கு சூப்பர் மேட்ச் இந்த கடப்பா!
தேவையானவை: வெங்காயம் 1, தக்காளி (பொடியாக நறுக்கவும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், தனியா 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன், பூண்டு - 10 பல், கடுகு கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளியை வதக்கிக் கொள்ளவும். வறுத்த பொருட்களையும் வதக்கிய தக்காளியையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து தோல் நீக்கிய பூண்டை தட்டிப் போட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இந்த சாம்பாரை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.(Coconut Chilli Powder
Ingredients: Grated coconut, groundnuts - 1 cup each, dry chillies half a cup, jaggery - a pinch of nutmeg, agave, salt - as required.
Recipe: In veruvali
Alternately fry coconut flakes, dal, dry chillies and asparagus. Then cool them and add jaggery and salt to it and grind it in a mixer.
This coconut chili powder can be eaten with idli and dosa.
Eggplant Subji
Ingredients: Eggplant, onion, tomato 4 each, turmeric powder quarter teaspoon, chilli powder, tamarind paste 4 teaspoon each, green chilli mustard, cumin, curry leaves, coriander leaves, salt, oil as required. 2,
Method: Heat oil in a cooker and season with mustard, cumin and curry leaves. Then add finely chopped onion, tomato, green chillies, cut aubergine into small pieces, salt, turmeric powder, chilli powder and coriander leaves and saute well. Then ferment
Cover the cooker and after two whistles take it out and let it cool well. This is a perfect side-dish for idli, dosa, chapati, paratha, naan!
Red chillies - 1 cup each, Sour solution - 2 tbsp, Mustard, Chickpeas (for seasoning), Ulan dal, Fenugreek, Curry leaves a little, Oil " 2 tbsp, Salt - as required.
Method: Heat a teaspoon of oil in a pan and fry red chillies and chickpeas separately. Put coconut flakes in the same pan and fry until golden brown and keep it cool. Put the fried ingredients together in a mixer, add sour cream, salt and grind it. Leave a teaspoon of oil in another pan and add mustard greens, curry leaves, chickpeas and urad dal. Mix it with ground paste: it's a perfect side-dish for idli and dosa!
Gadapa
Ingredients: Lentils - 1 cup, Onion, Tomato, Cardamom, Bark, Potato Cloves - 2, Green Chillies - 4, Ginger-Garlic 1 each, Paste, Anise - 1 tbsp each, Peanuts 3 tbsp, Coconut Oil - 4 tbsp, Salt, Oil - As much as needed.
Method: Boil the dal. Boil the potatoes and peel them and mash them. Put peanuts, coconut flakes, cardamom, cloves, bark, anise, chopped green chillies together in a mixer and grind them finely. Leave some oil in a pan and add ginger-garlic paste, chopped onion, chopped tomato and saute it, add ground paste, mashed potato, boiled gram dal and salt and bring to a boil. This Kadapa is a super match for Italian and Dosa!
Ingredients: Onion 1, Tomato (finely chopped), Fenugreek - 1/4 teaspoon, Tanya 1 teaspoon, Peanuts - 2 teaspoons, Coconut flakes - 4 teaspoons, Garlic - 10 cloves, Mustard curry leaves - a little, Salt, Oil - as required.
Method: Heat a little oil in a pan and fry chickpeas, taniya and fenugreek seeds separately and let cool. In the same pan, add some oil and saute the tomatoes. Put the fried ingredients and the sauteed tomatoes together in a mixer and grind it finely along with the grated coconut. Leave a little oil in a pan, season with mustard, curry leaves, grate the peeled garlic, add chopped onion and saute well. Then add salt and ground paste and bring to a boil. This sambar can be served with idli, dosa, chapati.
கருத்துகள்
கருத்துரையிடுக